fbpx
Homeபிற செய்திகள்கோவையில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு தொடர் ஓட்டம்

கோவையில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு தொடர் ஓட்டம்

கோவையில் உள்ள பிஷப் அம்ப்ரோஸ் கல்லூரியின் வெள்ளி விழா கொண்டாட் டத்தின் ஒரு பகுதியாக போதை பொருட்கள் ஒழிப்பை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு தொடர் ஓட்டம் நடைபெற்றது.

கோவை மாநகர் பகுதியில் செயல்பட்டு வரும் பிஷப் அம்ப்ரோஸ் கல்லூரியின் வெள்ளி விழாவை முன்னிட்டு போதை பொருள் ஒழிப்பை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு தொடர் ஓட்டம் நேரு விளையாட்டு அரங்கம் பகுதியில் நடைபெற்றது.

இதனை கோவை மறை மாவட்டத்தின் ஆயர் தாமஸ் அக்கு வினாஸ் மற்றும் கோவை மாநகர காவல் ஆணையாளர் பால கிருஷ்ணன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

சுமார் 5கிமீ தூரம் நடைபெற்ற இந்த தொடர் ஓட்டத்தில் கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டு பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் கல்லூரியின் செயலர் அருள்தந்தை முனைவர் ஆர் டி இ ஜெரோம் , கல்லூரியின் முதல்வர் ஆ பீட்டர் ராஜ் , உடற்கல்வி இயக்குனர் முனைவர் வேணுகோபால் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img