fbpx
Homeபிற செய்திகள்ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் பாரதி விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் பாரதி விழா

மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் நினைவு நாளையொட்டி, கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ் மன்றம் சார்பில், பாரதி விழா நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார் தலைமை வகித்தார். ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல் லூரியின் முன்னாள் மாணவரும் மென்பொருள் பொறியியலாளர் மற்றும் தன்னம்பிக்கைப் பேச்சாளருமான க.இரா.லஷ்மி நரசிம்மன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அவர் பேசும்போது, “இந்தியாவில் சமத்துவத்தை விதைத்து அதற்கு முன் மாதிரியாக வாழ்ந்து காட்டியவர் பாரதி. புதியனவற்றை அறிமுகம் செய்வதில் முனைப்போடு திகழ்ந்தவர்.

தொடர்ந்து முயன்றால் முடியாதது என்று இவ்வுலகில் எதுவும் இல்லை என உணர்த்தியவர். பாரதியின் புதிய ஆத்திச்சூடியில் ஏதேனும் ஒன்றை இன்றைய இளைஞர்கள் தங்களுடைய வாழ்வில் கடைபிடிக்க வேண்டும். இதுவே பாரதிக்கு நாம் செய்யும் மரியாதை“ என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து பாரதி நினைவுநாளை முன்னிட்டு நடைபெற்ற பேச்சுப் போட்டி மற்றும் பாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கிப் பாராட்டினார்.

நிகழ்வில் பல்வேறு துறைகளைச் சார்ந்த பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழாவினை தமிழ் மன்ற ஒருங்கிணைப்பாளர் மற்றும் துறைப் பேராசிரியர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

முன்னதாக மொழித் துறைத் தலைவர் முனைவர் த.விஸ்வநாதன் வரவேற்றார்.
தமிழ் மன்ற ஒருங்கிணைப்பாளர் முனைவர் மு பாண்டி செல்வி நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img