கோவையில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் இன்று நடைபெற்றது. இதில் சுமார் 1200 வேலை தேடுவோர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், ரூட்ஸ் குழும நிறுவனங்கள் மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா குழும நிறுவனங்கள் இணைந்து கோவையில் மாபெரும் தனியார் வேலை வாய்ப்புமுகாம் நடைபெற்றது.
இந்த நிகழ்வானது நவ இந்தியா, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் எஸ் என் ஆர் கலையரங்கத்தில் இன்று காலை 9:30 மணிக்கு துவங்கி மாலை 4:00 மணி வரை நடைபெறவுள்ளது.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் சுமார் 70க்கும் மேற்பட்ட பெரு நிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் பங்கேற்றன. 500-க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டன.
முன்னதாக நடைபெற்ற துவக்க விழாவிற்கு வந்திருந்தவர்களை ஸ்ரீ ராமகிருஷ்ண பொறியியல் கல்லூரியின், பேராசிரியர் முனைவர் பிரவீன் குமார் வரவேற்றார்.
எஸ்.என்.ஆர் அறக்கட்டளையின் இணை நிர்வாக அறங்காவலர் எஸ். நரேந்திரன் தலைமை வகித்தார். கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டுதல் மையத்தின் துணை இயக்குனர் எம்.கருணாகரன் துவக்க உரையாற்றினார்.
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக, நிரல் மேலாளர் கனிமொழி வாழ்த்துரை வழங்கினார். விழாவில்ரூட்ஸ் குழும நிறுவனங்களின் மனித வள மேம்பாட்டு துறை, இயக்குனர், முனைவர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் சிறப்புரையாற்றினார்.



