கோவை குரூப் 2 (டிஎன்) விமானப்படை என்சிசி சார்பில் தூய்மை இந்தியா நிகழ்ச்சி நடை பெற்றது. இதில், பிஎஸ்ஜி கலைக்கல்லூரி, அரசு கலைக்கல்லூரி, ஹிந்துஸ் தான் என்ஜினீயரிங் கல்லூரி, ஹிந்துஸ்தான் தொழில்நுட்ப கல்லூரி, ஹிந்துஸ்தான் கலை கல்லூரி, ஸ்டேன்ஸ் குரூப் பள்ளி உள்ளிட்ட பல்வேறு கல்வி நிறுவனங்களிலிருந்து 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
கோவை சுங்கம் அருகே உள்ள குளத்தில் தூய்மை பணிகளை விமானப் படை கமாண்டிங் அதி காரி விங் கமாண்டர் பர்குணன் தொடங்கி வைத்தார். இதில், குளம் மற்றும் நடைபாதையில் 300 கிலோவுக்கும் மேற்பட்ட பிளாஸ்டிக், இதர குப்பைகளை சேகரித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் ஒப்ப டைத்தனர். மேலும் அந்த வழியே சென்ற வாகன ஓட்டிகளுக்கு தூய்மை இந்தியா குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் குரூப் கமாண்டர் கர்னல் சிவராவ், கமாண்டிங் அதிகாரி பர்குணன், வாரண்ட் அலுவலர் சதீஷ், என்சிசி அலுவலர் ஜெய் னுலாப்தீன் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை விமானப்படை என்சிசி பயிற்சியாளர்கள் சுகு மாரன், ரவி, விகாஸ் ஆகி யோர் செய்திருந்தனர்.



