கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி ஈரோட்டில் திமுக சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் மறைந்த கலைஞர் கருணாநி தியின் நூற்றாண்டு விழாவையொட்டி திமுக ஈரோடு பெரியார் பகுதி கழகம் சார்பில் ஈரோடு புதுமை காலனியில் இலவச மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. முகாமிற்கு பெரியார் நகர் பகுதி செயலாளர் அக்னி சந்துரு என்ற சந்திரசேகர் தலைமை தாங்கினார். மாநகராட்சி 3ம் மண்டல தலைவர் சசிக்குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக திமுக ஈரோடு மாநகர செயலாளர் சுப்பிரமணியம் பங்கேற்று முகாமினை துவக்கி வைத்தார்.
இதில், திமுக மருத்துவ அணி மாவட்ட அமைப்பாளர் டாக்டர் விவேக் மற்றும் கட்சியின் நிர்வாகிகள், 44வது வார்டினை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.