fbpx
Homeபிற செய்திகள்கோவை குமரகுரு கல்லூரியில் ஐஎஸ்எஸ்எஸ் 11வது தேசிய மாநாடு

கோவை குமரகுரு கல்லூரியில் ஐஎஸ்எஸ்எஸ் 11வது தேசிய மாநாடு

கோவை, குமரகுரு கல்லூரியில் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஸ்மார்ட் ஸ்ட்ரக்சர்ஸ் அண்ட் சிஸ்டம்ஸ் (ஐஎஸ்எஸ்எஸ்) 11வது தேசிய மாநாடு நடைபெற்றது.

3 நாள்கள் நடைபெற்ற இந்த மாநாட்டில் பீசோ எலக்ட்ரிக் பொருட்கள், சென்சார்கள், சுகாதார கண்காணிப்பு ஆகிய வற்றில் நாடு முழுவதும் உள்ள எம்இஎம்எல், ஸ்மார்ட் மெட்டீரியல் கட்டமைப்புகள் துறையில் ஆராய்ச்சியாளர்கள், பிற நிபுணர்களை ஈர்த்தது.

குமரகுரு தொழில் நுட்பக் கல்லூரி முதல்வர் சரவணன் வரவேற்றார். ராணு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக் கழக (டிஆர்டிஓ) விஞ்ஞானி சுமா வர்கீஸ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார்.

ஐஎஸ்எஸ்எஸ் தலை வரும், இடைநிலை அறிவியல் பிரிவின் முதல்வருமான நவகந்தா பட், பாதுகாப்பு துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறை முன்னாள் செயலாளர் பேராசிரியர் வாசுதேவ் கே.ஆத்ரே, குமரகுரு தொழில்நுட்ப கல்லூரி மாநாட்டு தலைவரும், ஆராய்ச்சி இணை பேராசிரியருமான வி.நடராஜன் உள்ளிட் டோரும் மாநாட்டில் சிறப்புரையாற்றினர்.

கல்லூரி முதல்வர் சரவணன் நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img