fbpx
Homeபிற செய்திகள்கோவையில் 21ம் தேதி 30 இசைக் கருவிகளுடன் ஐசக் நெல்சன் நடத்தும் சாதனை மியூசிக் நிகழ்ச்சி

கோவையில் 21ம் தேதி 30 இசைக் கருவிகளுடன் ஐசக் நெல்சன் நடத்தும் சாதனை மியூசிக் நிகழ்ச்சி

கோவையில் வரு கிற 21ஆம் தேதி பல இசைக்கருவிகளை கொண்டு இசைக்கும் மியூசிக் நிகழ்ச்சி கோ இந்தியா கலையரங்கில் நடக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் கோவை இசைக் கலை ஞர் ஐசக் நெல்சன் புல் லாங்குழல், வீணை, கிட் டார், தபேலா, வயலின் உள்பட 30க்கும் மேற்பட்ட இசைக்கருவிகளை கொண்டு இசை நிகழ்ச்சி நடத்துகிறார். மேலும் அவர் கடந்த மே 1-ந்தேதி 30 இசைகருவிகளை 1 மணிநேரம் 43 நிமிடம் 57 நொடிகள் வாசித்து உலக சாதனை புரிந்து உள்ளார்.

அதை தொடர்ந்து ஐசக் நெல்சனை பாராட்டி வருகிற ஜூன் 24ம் தேதி சென்னையில் கலாம் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் என்ற விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது. இந்த சாதனையை இன்டர் நேஷனல் புக்ஸ் ஆப் ரெகார்ட்ஸ் குழுமம் அங் கீகரித்து உள்ளது.

இந்த தகவல்களை கோவை இசைக் கலைஞர் ஐசக் நெல்சன் கோவையில் நிருபர்களிடம் தெரிவித்தார். அப்போது முருகன், மணிகண்டன் உள்பட பலர் இருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img