fbpx
Homeபிற செய்திகள்20 லட்சம் எலக்ட்ரானிக் பொருட்களை உள்நாட்டில் உற்பத்தி செய்து ‘ போல்ட்’ சாதனை

20 லட்சம் எலக்ட்ரானிக் பொருட்களை உள்நாட்டில் உற்பத்தி செய்து ‘ போல்ட்’ சாதனை

மத்திய அரசின் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில் முன்னணி நிறுவனமாக திகழும் போல்ட் நிறுவனம் வயர்லெஸ் ஸ்டீரியோ, ஹெட்போன், ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட 20 லட்சத்திற்கும் மேற் பட்ட எலக்ட்ரானிக் பொருட்களை வெற்றிகரமாக தயாரித்துள்ளது.

தயாரிப்பு வடிவமைப்பு முதல் பொறியியல் வரை மற்றும் தயாரிப்புகளை அசெம்பிள் செய்வது வரை அனைத்தையும் தரத்தில் எந்தவிதமான சமரசம் செய்யாமல் போல்ட் நிறுவனம் தனது தயாரிப்புகளின் உற்பத்தி செயல்முறையை உள்நாட்டிலேயே திறம்பட செய்துள்ளது..

வயர்லெஸ் ஸ்டீரியோக்கள், நெக்பேண்டுகள் மற்றும் ஸ்மார்ட்வாட்ச்களை தயாரிப்பதில் முன்னணி நிறுவனமாக திகழ்கிறது இந்நிறுவனம்.

இதில் 12.76 லட்சம் யூனிட் ட்ரூ வயர்லெஸ் ஸ்டீரியோ, 6 லட்சம் யூனிட் நெக்பேண்ட், 1.25 லட்சம் ஸ்மார்ட்வாட்சுகளும் அடங்கும். இந்த தயாரிப்புகளுக்கான முழு உற்பத்தி செயல்முறை இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்நிறுவ னம் தெரிவித்துள்ளது.

இந்நிறுவனம் தரத்திற்கு முக்கியத்துவம் அளித்து மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்த சாதனையை செய்திருக்கிறது.

‘மேக் இன் இந்தியா’

போல்ட் நிறுவனத்தின் நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியுமான வருண் குப்தா கூறியதாவது: சிறப்பான பயிற்சியின் காரணமாக, நல்ல தரத்தில் சிறந்த தயாரிப்புகளை உற்பத்தி செய்ய முடிகிறது. உள்நாட்டில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் குழுவை எங்கள் நிறுவனம் கொண்டிருப்பதால், புதுமைகள் மற்றும் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி நல்ல வளர்ச்சி அடைந்து வருகிறது.

மத்திய அரசின் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தில் எங்களின் மேம்பாட்டு திறன்களை அதிகரிக்க பலவிதமான நடவடிக்கைகளைள் மேற்கொண்டு வருகிறோம்.
இதன் காரணமாக தரமான தயாரிப்புகளை எங்களால் வழங்க முடிகிறது என்றார்.

படிக்க வேண்டும்

spot_img