Homeபிற செய்திகள்‘கேம்ஃபோர்டு ஃபெதர் ஃப்ளைட்’:சிறார்களுக்கான பூப்பந்துப் போட்டி

‘கேம்ஃபோர்டு ஃபெதர் ஃப்ளைட்’:சிறார்களுக்கான பூப்பந்துப் போட்டி

கோவை கேம்ஃபோர்டு இன்டர்நேஷனல் பள்ளி சார்பில் பள்ளி வளாகத்தில் ‘கேம்ஃபோர்ட் ஃபெதர் ஃப்ளைட்’ (Camford Feather Flight) பூப்பந்துப் போட்டியை நடத்தியது. இதில் 35-க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த 180க் கும் மேற்பட்ட இளம் பூப்பந்து விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இப்போட்டிகள் சிறுவர் மற்றும் சிறுமிகளுக்கான 9 வயதுக்குட்பட்டோர், 11 வயதுக்குட்பட்டோர், 13 வயதுக்குட்பட்டோர் மற்றும் 15 வயதுக்குட் பட்டோர் ஆகிய பிரிவுகளில் நடத்தப்பட்டன.
போட்டியாளர்கள் மன உறுதியுடன் தங்கள் திறமையான விளையாட்டு உணர்வை முழுமையாக வெளிப்படுத்தினர்.
சிறுவர் பிரிவில், வேல் இன்டர்நேஷனல் பள்ளியின் ஐ.இ.சிவா மித்ரன் 9 வயதுக்குட்பட்டோர் பிரிவிலும், சாந்தி பள்ளியின் ராகவ் 11 வயதுக்குட் பட்டோர் பிரிவிலும் வெற்றி பெற்றனர். ஜிஜிஆர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் துவாரகன் 13 வயதுக்குட்பட்டோர் பிரிவிலும், ஆர்.வி. அகாடமி மாணவன் ஆர்.இ.விஸ்வேஷ் 15 வயதுக்குட்பட்டோர் பிரிவிலும் வெற்றி வாகை சூடினர்.
சிறுமியர் பிரிவில், வித்யா நிகேதன் பப்ளிக் பள்ளியின் டி.இ.மிர்துளா 11 வயதுக்குட்பட்டோர் பிரிவில் வெற்றி பெற்றார். சின்மயா பள்ளியின் அக்ஷயா ஸ்ரீ 13 வயதுக்குட்பட்டோர் பிரிவிலும், கேம்ஃபோர்ட் இன்டர்நேஷனல் பள்ளியின் எம்.எஸ். லக்ஷிதா 15 வயதுக்குட்பட்டோர் பிரி விலும் வெற்றி பெற்றனர்.
போட்டி முடிவில் பரிசளிப்பு விழா நடை பெற்றது. கேம்ஃபோர்டு இன்டர்நேஷனல் பள்ளியின் தலைவர் என்.அருள் ரமேஷ், வெற்றியாளர்களுக்குக் கோப்பைகள், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கியதுடன், இளம் வீரர்கள், வீராங்கனைகளின் சாதனைகளைப் பாராட்டி வாழ்த்தினார்.
விளையாட்டுத் திறனை ஊக்குவிப்பதையும், இளம் விளையாட்டு வீரர்கள் தங்கள் திறன்களை வளர்த்துக்கொள்வதோடு ஒழுக்கம், விடாமுயற்சி மற்றும் விளையாட்டு உணர்வு போன்ற நற்பண்பு களைக் கற்றுக்கொள்ளவும் வாய்ப்பளிப்பதையும் நோக்கமாகக் கொண்டு இப்போட்டி நடத்தப் பட்டதாகப் பள்ளி நிர்வாகம் தெரிவித்தது.

படிக்க வேண்டும்

spot_img