fbpx
Homeபிற செய்திகள்‘நலத்திட்ட உதவிகளை வீடு தேடிச் சென்று வழங்க வேண்டும்’- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அறிவுறுத்தல்

‘நலத்திட்ட உதவிகளை வீடு தேடிச் சென்று வழங்க வேண்டும்’- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அறிவுறுத்தல்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (ஜன.19) வருவாய்த்துறை அலு வலர்களுக்கான பணி ஆய்வுக் கூட்டம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தலைமையில் நடந்தது.

மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி முன்னிலை வகித்தார். முன்னதாக வருவாய்த் துறையின் சார்பில் 34 பயனாளிகளுக்கு ரூ.19.27 லட்சம் மதிப்பிலான விலையில்லா வீட்டுமனை பட்டாக்கள், சமூக பாதுகாப்பு திட்டத்தின்கீழ் 51 பயனாளி களுக்கு ரூ.51,000 மதிப்பிலான உதவித்தொகை,, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் 11 பயனாளிகளுக்கு ரூ.35,787 மதிப்பிலான வேளாண் கருவிகள் மற்றும் இடுப்பொருட்கள், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் துறையின் சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.54,800 மதிப்பிலான தையல் இயந்திரங்கள், சமூக நலத்துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.2.50 லட்சம் மதிப்பிலான அசல் வைப்புநிதி பத்திரம் என மொத்தம் 111 பயனாளிகளுக்கு ரூ.23.19 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வழங்கினர்.

கூட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பேசியதாவது:
முதல்வர் உத்தரவின்படி, வருவாய்த்துறை அலுவலர்களு க்கான பணி ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.

வருவாய்த்துறையானது ஆங்கிலேயர் காலத்தில் இருந்து உருவாக்கப்பட்ட துறையாகும். இத்துறையிலிருந்து தான் மற்ற துறைகள் பிரித்து உருவாக்கப்பட்டுள்ளன. மக்களின் அன்றாட தேவைகளுக்கு வருவாய்த் துறையை தவிர்க்க முடியாது. அன்றாடம் பொதுமக்களை சந்திக்கும் மிகப்பெரிய துறையாக வருவாய்த் துறை உள்ளது.

பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை திட்டம், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை என பல்வேறு தேவைகளுக்கும் வருவாய்த்துறை முக்கியத்துவம் பெறுகிறது.

எனவே ஏழை, எளிய மக்களை எக்காரணத்தைக் கொண்டும் அலையவிடாமல், அலைக்கழிப்பு செய்யாமல் அவர்களின் கோரிக்கைகளை உடனே நிறை வேற்றி தர வேண்டும். அனைத்து துறைகளையும் முதல்வர் கண்காணித்து வருகிறார்.

வருவாய்த்துறை அலுவலர்கள் தங்கள் பணிகளை தொடர்ந்து துரிதமாக செயல்படுத்த வேண்டும். முதல்வரை பொறுத்தவரை, வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு மக்கள் அதிகமாக வந்து செல்லக்கூடாத வகையில் விரைந்து பணி நடக்க வேண்டும்.

முடிந்த அளவிற்கு ஆன்லைனிலேயே அந்த பணிகளை மேற்கொள்ள வேண்டும். பொதுமக்கள் அலுவலர்களை தேடி வட்டாட்சியர், கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்து செல்லாத வகையில் அது முதியோர் உதவித்தொகையாக இருந்தாலும் சரி, பட்டா மாறுதல், பட்டா வழங்குதல் போன்ற எந்தவித பணிகளுக்கும் அலுவர்களை தேடி செல்லும் நிலை மாறி, மாறாக அவர்களுக்கு தேவைப்படும் நலத்திட்ட உதவிகளை அவர்களை தேடிச்சென்று வழங்கிட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

அதேபோல் நம்முடைய மாவட்டத்தில் கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள், விமான நிலைய விரிவாக்கம், ஒருங்கிணைந்த தொழிற்சாலைகள், போன்ற மாவட்டத்தின் பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கு நில எடுப்பு பணிகள் உள்ளிட்ட பணிகள் விரைந்து முடித்திட வேண்டும் என்றும் பல்வேறு அறிவுரைகளை முதல்வர் வழங்கியுள்ளார்.

கோவை மாவட்டம் நமது மாநிலத்தின் முக்கியமானதொரு வளர்ச்சியடைந்த மாவட்டம். எனவே நில எடுப்பு பணிகள் மற்றும் முதியோர் உதவித்தொகை போன்ற பல்வேறு பணிகளுக்கும் முன்னுரிமை அளித்து பணியாற்றிட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

முதியோர் உதவித் தொகை 6000 பேர் விண்ணப்பம்

மின்சாரத்துறை அமைச்சர் 6,000 பேருக்கு முதியோர் உதவித் தொகை வழங்கிட வேண்டும் என்று விண்ணப்பங்களை வழங்கியுள்ளார்.
அவர்களுக்கும் முதியோர் உதவித்தொகை வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.

முதல்வரை பொறுத்தவரையில் யார் யார் தகுதி உள்ளவர்கள் என்று கருதப்படும் அடிப்படையில் அனைவருக்கும் முதியோர் உதவித் தொகைகளை உடனடியாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
குறிப்பாக நமது மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதி தொகுதிகள் உள்ள நிலையில் 11 வட்டாட்சியர் அலுவலகங்களே உள்ளன.

“கூடுதல் வட்டாட்சியர் அலுவலகம்”

மக்கள் தொகை எண்ணிக்கை அடிப்படையில் 4 லட்சம் பேருக்கு ஒரு வட்டாட்சியர் அலுவலகம் என்பது எளிய வகையில் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் சிரமம் உள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். எனவே இதனை முதல்வர் கவனத்திற்கு எடுத்துச் சென்று வருகின்ற நிதி ஆண்டில் கூடுதல் வட்டாட்சியர் அலுவலகங்களை ஏற்படுத்திட நடவடிக்கை எடுக்கப்படும்.

முதல்வர் கோவை மாவட்டத்தின் மீதுதனி அக்கறை கொண்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அவர் கோவை மாவட்டத்திற்கு தற்போது வரை அதிக முறை வருகை தந்துள்ளார் என்பதே இதற்கு சான்றாக உள்ளது.

அதுபோலவே மின்சாரத் துறை அமைச்சரும், கோவை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக இருந்து மாவட்டத்தினை வளர்ச்சி பாதையில் எவ்வாறு அழைத்துச் செல்ல முடியும் என்பதை சிந்தித்து பல்வேறு ஆலோசனைகளையும் அலுவலர்களுக்கு வழங்கி வருகிறார்.

முதல்வர் காலத்தில் கோவை மாவட்டம் பொற்காலமாக அனைத்து வளர்ச்சிகளை பெற்ற மாவட்டமாக விளங்கும்.
இவ்வாறு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பேசினார்.

இக்கூட்டத்தில் கூடுதல் தலைமை செயலாளர் /வருவாய்த் துறை செயலாளர் குமார் ஜெயந்த், கூடுதல் தலைமை செயலாளர்/ வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர், நில நிர்வாக ஆணையர் எஸ்.நாகராஜன், சமூக பாதுகாப்புத் திட்ட ஆணையர் முனைவர். வெங்கடாச்சலம், வருவாய் நிர்வாக இணை ஆணையர் ஜான் லூயிஸ், மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) டாக்டர் அலர் மேல்மங்கை, மாவட்ட வருவாய் அலுவலர் ப்பி.எஸ்.லீலா அலெக்ஸ், மாநகராட்சி துணை மேயர் வெற்றிச்செல்வன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img