கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் சுந்தரம் கார்டன் பகுதியில் மாநகராட்சி பொது நிதியில் ரூ.28.50 லட்சம் மதிப்பீட்டில் 520 மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்படவுள்ள மழைநீர் வடிகால் கட்டுமானப்பணியினை மேயர் கல்பனா ஆனந்தகுமார், பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்.
உடன் வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல், மாமன்ற உறுப்பினர் தவமணி பழனியப்பன், உதவி ஆணையர் மோகனசுந்தரி, மண்டல சுகாதார அலுவலர் ராதாகிருஷ்ணன், உதவி பொறியாளர் இளங்கோ, சுகாதார ஆய்வாளர் விஜயகுமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.



