Homeபிற செய்திகள்மழைநீர் வடிகால் திரும்ப கட்டுதல் பணிக்கு பணியை தொடங்கி வைத்த கோவை மேயர்

மழைநீர் வடிகால் திரும்ப கட்டுதல் பணிக்கு பணியை தொடங்கி வைத்த கோவை மேயர்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் கவுண்டம்பாளையம், மேட்டுப்பாளையம் பிரதான சாலை முதல் சங்கனூர் பள்ளம் வரை மூலதன நிதி திட்டத்தின்கீழ் ரூ.169 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் திரும்ப கட்டுதல் பணிக்கு மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் பூமிபூஜை செய்து பணியை தொடங்கி வைத்தனர்.

உடன் மேற்கு மண்டல தலைவர் தெய்வயானை தமிழ்மறை, மாமன்ற உறுப்பினர்கள் சுபஸ்ரீ சரத், கிருஷ்ணமூர்த்தி, சம்பத், செயற்பொறியாளர் இளங்கோவன், உதவி செயற்பொறியாளர் யோகசித்ரா, உதவி பொறியாளர் ராஜேஸ் வேணுகோபால் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img