fbpx
Homeபிற செய்திகள்கோவையில் கே.எம்.சி.ஹெச். சார்பில் பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ. 2.11 கோடி வழங்கல்

கோவையில் கே.எம்.சி.ஹெச். சார்பில் பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ. 2.11 கோடி வழங்கல்

ஜார்கண்ட் மாநில ஆளுநராக பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக கோவைக்கு வருகை தந்த சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு, கேஎம்சிஹெச் மருத்துவமனை சார்பில் பாராட்டு விழா நடந்தது.

பாஜக தமிழ்நாடு மாநில தலைவர் கே.அண்ணாமலை கௌரவ விருந்த னராக கலந்துகொண்டார். கேஎம்சிஹெச் மருத்துவமனை தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் நல்லா ஜி பழனிசாமி, பிரதம மந்திரி நிவாரண நிதிக்கு நன் கொடையாக ரூ. 2.11 கோடியை காசோலையாக ஜார்கண்ட் மாநில ஆளுநர் ராதாகிருஷ்ணனிடம் வழங்கினார்.

டாக்டர் நல்லா ஜி பழனிசாமி பேசும்போது, கோவையில் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோதும் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் என்ற முறையிலும் கோவையின் முன்னேற்றத்திற்காக ஆற்றிய பணிகளைப் பாராட்டினார்.

கேஎம்சிஹெச் மருத்துவமனை சார்பில் இதற்கு முன்னர் செய்யப் பட்ட சமுதாய மேம்பாட்டு பணிகளை நினைவுகூர்ந்தார். குறிப்பாக கொரோனோ பெருந் தொற்று காலத்தில் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு இரண்டு கோடி ரூபாய் நன்கொடை அளித்தது, கோவை மாநகராட்சி சுகாதாரப் பணியாளர்கள் பயன்பெறும் வகை யில் ரூ. 10 லட்சம் மதிப்புக்கு பாதுகாப்பு கவச ஆடைகள் மற்றும் உபகரணங்கள் மற்றும் 2000 லிட்டர் சானிடைசர் வழங்கியது.

புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவையில் கடந்த 25 ஆண்டுகளாக மாரத்தான் நிகழ்ச்சி நடத்திவருவது, அண்டை மாநிலம் கேரளா வெள்ளத்தால் தத்தளித்தபோது அவசர கால மருத்துவ முகாம்கள் நடத்தியது, காஜா புயலால் பாதித்த மக்களுக்கு மருத்துவ முகாம்கள் நடத்தியது முதலானவற்றை குறிப்பிட்டார்.

பெண்கள் உடல் நலம் பேணும் வகையில் பெண்கள் உடல்நல மையங்கள் அமைத்தது, சுவிட்ச் பாரத் திட்டத்தின் மூலம் கிராமப்புற மக்களுக்கு இலவச கழிப்பறைகள் காட்டிக்கொடுத்தது.

கிராமப்புற மாணவர்கள் கல்வி தரத்தை உயர்த்தும் வகையில் வகுப்பறைகள் மற்றும் கழிப்பறைகள் கட்டிக்கொடுத்தது, புற்றுநோயால் அவதிப்படும் ஏழை குழந்தைகளுக்கு மருத்துவ உதவி அளிப்பது, கிராமங்களில் இலவச மருத்துவ முகாம்கள் நடத்துவது, டைப் 1 வகை நீரிழிவு நோயால் அவதிப்படும் குழந்தைகளுக்கு பிராஜக்ட் கதிர், என்ற திட்டத்தின் மூலம் கோவை சென்ட்ரல் ரோட்டரி சங்கத்துடன் இணைந்து இதயங்கள் அறக்கட்டளை தேவையான மருத்துவ உதவிகள் அளித்தது, கோவில்களுக்கு கட்டிடம் சீரமைத்தல் மற்றும் ஆண்டு விழாக்களுக்கு உதவுதல் முதலானவை கேஎம்சிஹெச் முன்னெடுத்த சமுதாய நலன் மேம்பாட்டு முயற்சிகளில் குறிப்பிடத்தக்கவையாகும்.

பல்வேறு சமுதாய நலப் பணிகளுக்காக கேஎம்சிஹெச் மருத்துவமனை சார்பில் இதுவரை ரூ.16.21 கோடி அளிக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img