கோவை மண்டலத்தில் தொடங்கி இருப்பதன் மூலம் திருப்பூர், நீலகிரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களுக்கு கூடுதல் சேவையை வழங்க முடியும். நான்கு ரக ஜீப் காட்சிப்படுத்துதலோடு SGA JEEP கிளையில் அனைத்து ஜீப் ரகங்களுக்கும் தள்ளுபடி விலையில் விற்பனைக்கு கிடைக்கும்.
JEEP INDIA நிறுவனத்தின் விற்பனையகங்கள் 72 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜீப் இந்தியா SGA JEEP பெயரில் கோவையில் புதிய கிளையை தொடங்கியுள்ளது.
கிராண்ட் சேரோகி, ரேங்குலர், மெரிடியன் ஆகியவை 04 பெயர் வகைளின் முழு வரம்பையும் இங்கு காட்சிப்படுத்தப்படுகிறது. ஜீப் இந்தியா ஆபரேஷன் தலைவரும், ஸ்டலேந்தீஸ் ஆண்டீஸ் இந்தியா துணை நிர்வாக இயக்குநருமான ஆதித்யா ஜெயராஜ் கூறுகையில், இந்தியாவில் ஜீப் ரக வாகனங்களை விற்பனை செய்வதற்கு தமிழகம் ஒரு முக்கியமான மாநிலம்.
SGAஉடன் இணைந்து இருப்பதன் மூலம் கோயமுத்தூர் மண்டலத்தில் ஜீப் ரக வாகனங்களின் தேவையை வாடிக்கையாளர்களுக்கு மிக எளிதில் பூர்த்தி செய்ய முடியும் என்றார்.
SGA குழுமத்தின் நிர்வாக இயக்குநர் அற்புதராஜ் கூறுகையில்,
இக்கிளையின் மூலம் SUV வாகனங்களை விரும்பும் வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்ய முடியும் என்றார்.
SGA குழுமம் தென்னிந்தியாவில் ஆட்டோ மோட்டிவ் சில்லறை விற்பனையில் 2009 -ம் ஆண்டு முதல் முன்னணி வாகன பிராண்டுகளுடன் பிரத்யேக விற்பனையில் ஈடுபட்டு வரும் குழுமமாகும்.



