fbpx
Homeபிற செய்திகள்‘உள்ளூர்களுக்கான குரல்’ கோவையில் தீபாவளி கண்காட்சி

‘உள்ளூர்களுக்கான குரல்’ கோவையில் தீபாவளி கண்காட்சி

‘உள்ளூர்களுக்கான குரல்’ என்ற மத்திய அரசினால் துவங்கப்பட்ட திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச ஜவுளி மற்றும் மேலாண்மை கல்லூரி இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த திறமையான கைவினைஞர்களைக் கொண்டு தொகுக்கப்பட்ட 20 ஸ்டால்களை தீபாவளியை முன்னிட்டு மக்களுக்கு வழங்குகிறது.

உள்ளூரில் வடிவமைக்கப்பட்ட ஆடைகள், அணிகலன்கள் மற்றும் கைவினைப்பொருட்களின் பன்முகத்தன்மையை மேம்படுத்துவதற்காக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

‘மேட் இன் இந்தியா’ உன்னதமான கைவினைத்திறன், படைப்பாற்றல் மற்றும் பாரம்பரியத்தை கண்டறிய அனைவரையும் அழைக்கிறது. வரும் 8-ம் தேதி வரை, கல்லூரி வளாகத்தில் காலை 10 முதல் மாலை 6 மணி வரை கண்காட்சி நடைபெறுகிறது.

படிக்க வேண்டும்

spot_img