fbpx
Homeபிற செய்திகள்ஜமாபந்தியில் அதிமுக எம்எல்ஏ மனு

ஜமாபந்தியில் அதிமுக எம்எல்ஏ மனு

கோவை வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த 23ஆம் தேதி தொடங்கிய ஜமாபந்தி கூட்டம் 31 ஆம் தேதி முடிவடைந்தது.
இதில் 452 மனுக்கள் பெறப்பட்டன. அதில் 50மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டன.

டி.எஸ்.ஓ. குணசேகரன் முன்னிலையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் வடக்கு தாசில்தார் தங்கராஜ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ராதாகிருஷ்ணன், சமூக பாதுகாப்பு திட்டம் தாசில்தார் நிர்மலா மற்றும் அலுவலர்கள், கிராம நிர்வாக அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியின் இறுதி நாளில் சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன் கலந்து கொண்டு தாசில்தார் தங்கராஜ் இடம் மக்கள் கோரிக்கை அடங்கிய மனுவை வழங்கினார். மேற்கண்ட தகவலை கோவை வடக்கு வட்டாச்சியர் தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img