fbpx
Homeபிற செய்திகள்கோவையில் குளோபல் ஆர்ட் நடத்திய ஓவியப் போட்டி

கோவையில் குளோபல் ஆர்ட் நடத்திய ஓவியப் போட்டி

பள்ளி குழந்தைகளின் கலை மற்றும் படைப்பாற் றல் திறனை வளர்க்கும் விதமாக கோவையில் குளோபல் ஆர்ட் சார்பாக கலர் சேம்ப் 2023 எனும் ஓவிய போட்டி நடைபெற்றது.

தற்போது உலகம் முழுவதும் 22 நாடுகளில் 650 மையங்களைக் கொண்டு செயல்பட்டு வரும் குளோபல் ஆர்ட் மையம் தனது பதினெட்டாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

குழந்தைகளின் கலை மற்றும் ஆக்கப்பூர்வமான திறனை வளர்க்கும் விதமாக தொடர்ந்து கலைத்திறன் சார்ந்த போட்டிகளை நடத்தி வரும் குளோபல் ஆர்ட் கோவையில் எட்டாவது முறையாக தமிழக அளவி லான ஓவிய போட்டியை நடத்தியது.

கலர் சேம்ப் 2023

கலர் சேம்ப் 2023 எனும் தலைப்பில் கோவை நேஷனல் மாடல் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் கோவை, மதுரை, திருச்சி என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சார்ந்த பள்ளி குழந்தைகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்..

ஐந்து வயது முதல் பதனைந்து வயது வரையிலான மாணவ, மாணவிகள் இதில் கலந்து கொண்டு தங்களது படைப்பாற்றல் திறனை வண்ண ஓவியங்களாக படைத்து அசத்தினர்.

தொடர்ந்து இதில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கும் சிறந்த ஓவியங்களுக்கும் பரிசுகள் சான்றிதழ்கள், பதக்கங்கள் வழங்கி கவுரவிக்கப்பட் டது.

விழாவில் நைஸ் சர்வதேச பள்ளியின் இயக்குனர் பிரித்வி ஆனந்த், குளோபல் ஆர்ட் மையத்தின் தலைமை அதி காரி நமிர்த முகர்ஜி மற்றும் தமிழ்நாடு பொறுப்பாளர் மங்கள் சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

குளோபல் ஆர்ட் மையம், தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட இந்தியாவின் ஏழு மாநிலங்களில் செயல்பட்டு வருவது குறிப்பிடதக்கது.

படிக்க வேண்டும்

spot_img