கோவைப்புதூரில் உள்ள சிபிஎம் கல்லூரியில் அலையன்ஸ் கிளப் ஆப் கோயம்புத்தூர் ஹில் சிட்டி மற்றும் சிபிஎம் கல்லூரி இணைந்து உலக மருத்துவர் தினத்தை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் உள்ள சிறந்த மருத்துவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கோவை மாவட்ட சுகாதார இணை இயக்குனர் டாக்டர் எஸ்.மீரா கலந்து கொண்டார். அலையன்ஸ் கிளப் கோயம்புத்தூர் மாவட்ட ஆளுநர் ஸ்ரீனிவாச கிரி முன்னிலை வகித்தார். கோவை மாவட்ட அமைச்சரவை ஆலோசகர் பிரபாகரன் தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் சிபிஎம் கல்லூரி முதல்வர் சிங்காரவேலு, தி ஹிந்து நாளிதழ் பொது மேலாளர் சிவக்குமார், முதல் துணை மாவட்ட ஆளுநர் ராஜன், மண்டல தலைவர் பிரியா எஸ் கிரி, வட்டார தலைவர் சதீஷ்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
தொடர்ந்து மருத்துவத் தறையில் சிறந்த சேவையை வழங்கி வரும் கோவை மாவட்டத்தை சேர்ந்த சிறந்த மருத்துவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இதில் நுரையீரல் மருத்துவ நிபுணர் டாக்டர் மோகன் குமார், புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் கார்த்திகேஸ், இறப்பை குடல் நோய் அறுவை சிகிச்சை நிபுணர் பார்த்தசாரதி, பொது அறுவை சிகிச்சை நிபுணர் ஜெயக்குமார், சிறுநீரகவியல் மருத்துவ நிபுணர்கள் அருள் மற்றும் தினகரன் பாபு, மருத்துவர்கள் மோகன்ராஜ், சுந்தரேசன், வெங்கடேஷ், சித்ரா, கீர்த்தி மற்றும் நிர்மலா தேவி ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் அலையன்ஸ் கிளப் ஆப் ஹில் சிட்டி தலைவர் டி.எஸ்.குட்டன், செயலாளர் குமரேசன் மயில்சாமி, பிஆர்ஓ சரவணன் ராஜா மற்றும் நிர்வாகிகள் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.