முன்ளாள் மத்திய அமைச்சரும் கழக முன்னோடி முரசொலிமாறனின் 90 வது பிறந்தநாளை ஒட்டி கோவை மாவட்ட திமுக அலுவலகத்தில் மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் வழிகாட்டுதலின்பேரில், மாவட்ட துணைச்செயலாளர் கோட்டை அப்பாஸ் தலைமையில், திமுகவினர் முரசொலிமாறன் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
இதில், சட்டத்துறை இணைச் செயலாளர்கள் கேஎம்.தண்டபாணி, அருள்மொழி, மாவட்ட துணை செயலாளர்கள் ஆனந்த், கல்பனா செந்தில், மாவட்ட பொருளாளர் எஸ்எம்.முருகன், கார்த்திகேயன் பொதுக்குழு உறுப்பினர்கள் புதூர் மணிகண்டன், சரஸ்வதி, செயற்குழு பாலசுப்பிரமணியம், பகுதி கழக செயலாளர் நாகராஜ், மாநில டாஸ்மாக் தொழிலாளர் அணி துணைச்செயலாளர் தமிழ்ச்செல்வன், வழக்கறிஞர், டாக்டர் எமரால்டு, டாஸ்மாக் தொழிற்சங்க தலைவர் ராக்கிமுத்து, இளைஞரணி அமைப்பாளர் தனபால், தகவல்தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ஆர்கே.சுரேஷ் குமார், மாநில தீர்மானக்குழு இணைச்செயலாளர் முரா.செல்வராஜ், தேவசீலன், கணேசன், இஸ்மாயில் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



