-ரெயின்ட்ராப்ஸ் பல்துறை சார்ந்த இளைஞர் களை உள்ளடக்கிய சமூக அமைப்பாகும். இந்த அமைப்பு ஊடகங்கள் மற்றும் பல்வேறு கலை சார்ந்த நிகழ்சிகள் வாயிலாக சமூக விழிப்புணர்வு கருத்துக்களை மக்கள் நெஞ்சங்களில் விதைத்து வருகிறது.
ரெயின்ட்ராப்ஸ் சமூக அமைப்பின் நல் லெண்ணத் தூதராக ஆஸ்கார் வென்ற இசைப் புயல் ஏ.ஆர்ரஹ்மா னின் சகோதரியும் இசைய மைப்பாளருமான ஏ.ஆர். ரெஹானா உள்ளார்.
ரெயின்ட்ராப்ஸ் சமூக அமைப்பு அண்மையில் சென்னையில் உள்ள ஆத ரவற்றோர் இல்லங் களில் ஆய்வு நடத்தியது. அங்கு வசிக்கும் பல குழந்தைகளுக்கு தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது விமானத்தில் பறக்க வேண்டும் என்பது பெரும் ஆவலாக இருந்தது.
“வானமே எல்லை”
அத்தகைய குழந்தைகளின் கனவை நனவாக்க ரெயின்ட்ராப்ஸ் அமைப்பானது, சத்யபாமா பல்கலைக்கழகத்துடன் இணைந்து “வானமே எல்லை” என்ற ஒரு நாள் பயணத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது.
இதற்காக சேவாலயா, ஆனந்தம், செஸ் உள்ளிட்ட இல்லங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 26 குழந்தைகள், இன்று காலை சென்னையில் இருந்து கோவைக்கு விமானத்தில் அழைத்துவரப்பட்டு மீண்டும் கோவையில் இருந்து சென்னைக்கு ரயிலில் அழைத்து செல்லப்பட்டனர்.
இதில் ஒரு பார்வை மாற்றுத்திறனாளி மாணவரும் ஒரு திருநங்கை மாணவியும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது. சென்னையில் இருந்து விமானத்தில் கோவை வந்திறங்கிய மாணவ மாணவியரை கோவை விமான நிலையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சமீரன், மாநகராட்சி ஆணையர் பிரதாப் முருகன், வருவாய் பிரிவு அதிகாரி பூமா ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
பின்னர் கோவை அறிவியல் மையம், ஜி டி நாயுடு அருங்காட்சியகம் மற்றும் ஐ லவ் கோவை ஆகிய இடங்களை சுற்றிப்பார்த்து மாணவ மாணவியர் மகிழ்ந்தனர்.இந்த விமான பயணத்தை சிறார்கள் வாழ்நாள் முழுவதும் நினைவுகூரத்தக்க வகையில் இயற்கை அறிவியல் ஆய்வாளரும் மாநில திட்டக்குழு உறுப்பினருமான சுல்தான் அஹ்மத் இஸ்மாயில், பிரபல பாடகர்களும் சின்னத்திரை நட்சத்திரங் களுமான சிவாங்கி, சாம் விஷால், ரெயின்ட்ராப்ஸ் அமைப்பின் நிறுவனத் தலைவர் அரவிந்த் ஜெய பால் மற்றும் அமைப்பின் உறுப்பினர்கள் பலரும் குழந்தைகளுடன் பயணித்து மகிழ்ந்தனர்.