fbpx
Homeபிற செய்திகள்கோவை மாவட்டம் முழுவதும் 30.5 லட்சம் வாக்காளர்கள்

கோவை மாவட்டம் முழுவதும் 30.5 லட்சம் வாக்காளர்கள்

கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளின் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிடப்பட்டது.

இறுதி வாக்காளர் பட்டியல்

இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட கலெக்டர் சமீரன் வெளியிட்டார். . இன்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் மேட்டுப்பாளையம் தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 144395 பேர், பெண் வாக்காளர்கள் -154862 பேர், மூன்றாம் பாலினம் -47பேர் என மொத்தம் 2,99304 பேர் உள்ளனர்.

சூலூர் தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 155091பேர், பெண் வாக்காளர்கள் -163204பேர், மூன்றாம் பாலினம் -69 பேர் என மொத்தம் 3,18,364 பேர் உள்ளனர். கவுண்டம்பாளையம் தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 227835 பேர், பெண் வாக்காளர்கள் -229454பேர், மூன்றாம் பாலினம் -119 பேர் என மொத்தம் 4,57,408 பேர் உள்ளனர்.

கோவை வடக்கு தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 166128பேர், பெண் வாக்காளர்கள்-164896பேர் மூன்றாம் பாலினம் -38 பேர் என மொத்தம் 331062 பேர் உள்ளனர்.

தொண்டாமுத்தூர் தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 161332 பேர், பெண் வாக்காளர்கள் -165437 பேர், மூன்றாம் பாலினம் -126 பேர் என மொத்தம் 326895 பேர் உள்ளனர்.

கோவை தெற்கு தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 121422 பேர், பெண் வாக்காளர்கள்-122365 பேர் மூன்றாம் பாலினம் -32 பேர் என மொத்தம் 243819 பேர் உள்ளனர்.

சிங்காநல்லூர் தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 160400 பேர், பெண் வாக்காளர்கள் -163536 பேர், மூன்றாம் பாலினம் -26 பேர் என மொத்தம்323962 பேர் உள்ளனர்.
கிணத்துக்கடவு தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 161146 பேர், பெண் வாக்காளர்கள்-168000 பேர், மூன்றாம் பாலினம் -40 பேர் என மொத்தம் 329186 உள்ளனர்.

பொள்ளாச்சி தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 106805 பேர், பெண் வாக்காளர்கள் -116471பேர், மூன்றாம் பாலினம் -40 பேர் என மொத்தம் 223316 பேர் உள்ளனர்.
வால்பாறை (தனி) தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 94167 பேர், பெண் வாக்காளர்கள் -103196 பேர் மூன்றாம் பாலினம் -21 பேர் என மொத்தம் 197384 பேர் உள்ளனர்.

கோவை மாவட்டத்தில் மொத்தம் ஆண் வாக்காளர்கள் 1498721பேர், பெண் வாக்காளர்கள் 1551421பேர், மூன்றாம் பாலினத்தவர்கள் 558 பேர் என மொத்தம் 30 லட்சத்து 50 ஆயிரத்து 700 வாக்காளர்கள் உள்ளனர்.

18 முதல் 19 வயது நிறைவடைந்த இளம் வாக்காளர்கள் 18,426 வாக்காளர் பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
23,170 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். புதிதாக 35,762 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி கமிஷனர் பிரதாப், வாக்காளர் பதிவு அலுவலர்கள் அனைத்து கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img