fbpx
Homeபிற செய்திகள்மெட்ரோ ரயில், செம்மொழி பூங்கா, சிப்காட்: கோவைக்கு முக்கிய திட்டங்கள் - ஸ்டாலினுக்கு மாநகராட்சி கிழக்கு...

மெட்ரோ ரயில், செம்மொழி பூங்கா, சிப்காட்: கோவைக்கு முக்கிய திட்டங்கள் – ஸ்டாலினுக்கு மாநகராட்சி கிழக்கு மண்டல கூட்டத்தில் பாராட்டு

கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டல மாமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டம் நேற்று (30ம் தேதி) வியாழக்கிழமை மாலை 3.30 மணியளவில் மண்டலத் தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் தலைமையில் நடைபெற்றது.

மாநகராட்சி கிழக்கு மண்டல உதவி ஆணையாளர் முத்துராமலிங்கம், மாநகராட்சி பொதுக் கணக்குக் குழு தலைவர் தீபா தளபதி இளங்கோ , உதவி நகரமைப்பு அலுவலர் குமார் , உதவி நிர்வாக பொறியாளர் சுந்தரராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் முதல் அமைச்சரின் தலைமையிலான பொற்கால ஆட்சிக் கான மற்றுமொரு மணி மகுடமாக 2023-24 நிதியாண்டுக்கான பட்ஜெட் அமைந்திருக்கிறது. முன்னணி மாநிலமாக தமிழ்நாடு தலைநிமிர்ந்து நடைபோட வேண்டுமென்ற தொலைநோக்குப் பார்வையுடன், சமூக பாதுகாப்பு, கல்வி மூலம் பெண்கள் மேம்பாடு, வறுமை ஒழிப்பு, அடிப்படை கட்டமைப்பு, தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி, ஏழைகளின் நலன், இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதை பாராட்டியும் , நன்றி தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங் குடியின மாணவர்கள் பயன்பெறும் வகையில் 100 கோடி ரூபாய் மதிப்பில் விடுதிகள் , செம்மொழி பூங்கா அமைக்க ரூ.172.21 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு, மெட்ரோ இரயில் திட்டம் 9 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

கோவை உள்ளிட்ட பகுதிகளில் சிப்காட் அமைக்க 410 கோடி ரூபாய் ஒதுக்கீடு, கோவை மாநகராட்சி உள்ளிட்ட பகுதிகளில் முக்கிய பொது இடங்களில் இலவச வை -பை வசதி, தொழில்நுட்ப நகரங்கள் அமைக்கப்படும் என்பன போன்ற பல்வேறு முக்கியமான திட்டங்களை கோவைக்கு அறிவித்த தமிழ்நாடு முதலமைச்சருக்கும், நிதித் துறை அமைச்சர் பழனிவேல் திய £கராஜனுக்கும், பரிந்துரை செய்த தமிழக மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச் சர் வி.செந்தில் பாலாஜிக்கும் மனமார்ந்த நன்றிகளையும் , பாராட் டுகளையும் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானங்கள்

இக்கூட்டத்தில் குடிநீர் பிரச் சனை, சுகாதாரம், சாலை வசதி, தெரு விளக்கு வசதிகள், குடிநீர் திட்ட பணிகள், பாதாள சாக்கடை பணிகள், வார்டு வளர்ச்சிப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் நவீன்குமார் கோவிந்தராஜ், மணியன், பூபதி , கீதா, அம்சவேணி, மோகன், பாக்கியம், தர்மராஜ், கிருஷ்ணமூர்த்தி, சாந்தா மணி, சுமித்ரா, மு.சிவா, ஆதி மகேஸ்வரி மற்றும் மாநகராட்சி உதவி பொறியாளர்கள், சூயஸ் பொறியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img