fbpx
Homeபிற செய்திகள்முதல்வரின் புகைப்படம் அகற்றம் சுகாதார ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்ய கோவை மாநகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம்

முதல்வரின் புகைப்படம் அகற்றம் சுகாதார ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்ய கோவை மாநகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம்

கோவையில் சுகாதார ஆய் வாளர் அலுவலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகைப்படத்தை அகற்றிய விவகாரம் தொடர்பாக, சுகாதார ஆய்வாளரைப் பணி யிடை நீக்கம் செய்து மாநகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கோவை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் புதன்கிழமை நடை பெற்றது. மேயர் கல்பனா தலைமை தாங்கினார்.

மாநகராட்சி துணை ஆணையர் செல்வசுரபி, துணை மேயர் வெற்றிச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், மாநகரப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட வேண் டிய வளர்ச்சிப் பணிகள் குறித்து 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மேயர் கல்பனா பேசியதாவது: கிழக்கு மண்டலம் 24வது வார்டில் ரூ.49.50அ லட்சம் மதிப்பிலும், 86வது வார்டில் ரூ.45 லட்சம் மதிப்பிலும் தார் சாலைகள் சீரமைக்கப்படும்.

மேலும், இப்பகுதியில் உள்ள பள்ளி வீதி சாலை, குறுக்கு சாலை, சௌகார் நகர் பிரதான சாலை, பிலால் நகர், மதீனா நகர் பகுதிகளில் ரூ.47.75 லட்சம் மதிப்பில் தார் சாலை சீரமைக்கப்படும். 91வது வார்டில் ரூ.49 லட்சம் மதிப்பில் தார் சாலை சீரமைக்கப்படும்.

கிழக்கு மண்டல அலுவலகத் தில் ரூ.74.95 லட்சம் மதிப்பில் புதிய தாகக் கூட்ட அரங்கு, மின்தூக்கி வசதியுடன் அமைக்கப்படும். தெற்கு மண்டலம் 76வது வார்டு சுப்பிரமணிய உடையார் வீதி, வேடபட்டி சாலையில் தலா ரூ.32 லட்சம் மதிப்பில் பொதுக் கழிப்பிடங்கள் அமைக்கப்படும்.

5 மண்டலங்களிலும் பணி யாற்றும் 2,233 நிரந்தரத் தூய் மைப் பணியாளர்களுக்கு மழைக் காலங்களில் பணிபுரிய ரூ.74.62 லட்சம் மதிப்பில் மிளிரும் கவச உடை, மழை கோட், கையுறை, முகக்கவசம், ஷூ, தொப்பி உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்படும்.

மாநகரப் பகுதிகளில் 7,701 எல்இடி தெருவிளக்குகள் கொள் முதல் செய்ய ரூ.19.34 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விரையில், தெருவிளக்குகள் கொள்முதல் செய்யப்பட்டு பொருத்தப்படும்.

மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் உயர் அலுவலர்கள் பயன்பாட்டுக்கு ரூ.60 லட்சம் மதிப்பில் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய 150 வாக்கி&டாக்கிகள் கொள்முதல் செய்யப்படும் என்றார்.

இக்கூட்டத்தில், 33வது வார்டு, கவுண்டம்பாளையம் சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தில் வைக்கப்பட்பட்டிருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் புகைப்படத்தை அகற்றியது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ள திமுக வார்டு உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, முதல்வர் படத்தை அகற்றிய சுகாதார ஆய்வாளர் மாணிக்கத்தை பணி யிடை நீக்கம் செய்யக் கோரி சிறப்பு தீர்மானம் மாநகராட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

அதிமுக வார்டு உறுப்பினர்கள் பிரபாகரன், ரமேஷ், ஷர்மிளா ஆகியோர் 3 -கூட்டங்களில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், அவர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

படிக்க வேண்டும்

spot_img