சென்னையைச் சேர்ந்த சிம்ஸ் மருத்துவமனை நெடிய சிக்கலான, இதய அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து சாதனை படைத்திருக்கிறது.
மும்பையைச் சேர்ந்த ஒரு ஆண் நோயாளி ஒருவர் (வயது 61) அண்மையில் சிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஏற்கனவே 11 ஆண்டுகளுக்கு முன்பே சிக்கலான இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டவர். அந்நோயாளிக்கு தற்போது ஒரு புதிய பிரச்சனை உருவாகியிருந்தது.
அவருடைய உடலில் உள்ள முக்கியமான இரத்தக்குழாய் சேதமடைந் திருந்தது. அதனை ஒரு நுணுக்கமான குழாயின் உதவியுடன் அகற்றியாக வேண்டும். அவரது வயது, ஏற்கனவே செய்த அறுவை சிகிச்சை ஆகிய பெரும் சவால்களை மருத்துவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
இச்சூழலை சிம்ஸ் மருத்துவமனை லாவகமாகக் கையாண்டது. உடனடியாக இன்ட்ரா ஆபரேட்டிவ் டிரான்ஸ் கதீட்டர் ஆயோர்டிக் வால்வு ரீபி ளேஸ்மென்ட் மற்றும் ப்ரோஸன் எலிபெண்ட் ட்ரங்க் எனப்படும் இரண்டு நடைமுறைகளை ஒருங்கிணைத்து அறுவை சிகிச்சை செய்வது என்று தீர்மானிக்கப்பட்டது.
வழக்கமான பைபாஸ் அறுவை சிகிச்சையாகவே இதனை மேற்கொள்வது என்றும் முடிவு செய்யப்பட்டது. ஒரு மாரத்தான் ஓட்டம் போல ஒரே அமர்வில் தொடர்ச்சியாக முழு சிகிச்சையும் 10 மணி நேரத்தில் வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டது.
சிக்கல் இன்றி நடைபெற்ற இந்த வெற்றிகர அறுவை சிகிச்சை முடிந்தபிறகு, நோயாளி 8 நாட்களில் வீடு திரும்பினார்.
இது குறித்து சிம்ஸ் மருத்துவமனையின் இதயம் மற்றும் தீவிர இரத்தக் குழாய் நோய்கள் பிரிவின் இயக்குநர் மருத்துவர் வி.வி.பாஷி பேசுகையில், “பென்ட்டால் அறுவை சிகிச்சை ஏற்கனவே செய்துகொண்ட ஒரு நோயாளிக்கு TAVR
மற்றும் FET சிகிச்சைகளை ஒருங்கிணைத்து, கதீட்டர் அடிப்படையில் வால்வு பொருத்தி இரத்தக்குழாய் வளைவை சரிசெய்வது எளிதான ஒன்றல்ல.
ஆனால், நாங்கள் அதனை செய்து முடித்திருக்கிறோம். இது இந்தியாவிலேயெ முதன்முறையாகும்“ என்றார். இதய மார்புக்கூட்டு அறுவை சிகிச்சை துறை யின் முதுநிலை நிபுணர் டாக்டர். முகமது இத்ரீஸ், இந்தியாவில் அதிக கடினமான இதய சிகிச்சைகளில் ஒன்றான இது, ஒரு கலவை (ஹைபிரிட்) செயல்முறையாக செய்யப்பட்டிருக்கிறது என தெரிவித்தார்.
மருத்துவமனையின் தலைவர் டாக்டர். ரவி பச்சமுத்து, சாதனை படைத்திருக்கும் இந்த மருத்துவ செயல்முறை, எமது மருத்துவமனையின் வரலாற்றில் ஒரு புது யுகத்தை உருவாக்கி பெருமை சேர்த்திருக்கிறது. இதய சிகிச்சையின் தரம் மற்றும் புதுமையான உத்திகள் மீது நாங்கள் கொண்டிருக்கும் அர்ப்பணிப்பையும் இது எடுத்துக்காட்டுகிறது என தெரிவித்தார்.



