fbpx
Homeபிற செய்திகள்சுய உதவிக்குழு கடன் மூலம் வாழ்க்கை தரத்தை பெண்கள் மேம்படுத்தி உள்ளனர்: கடலூர் மாவட்ட ஆட்சியர்...

சுய உதவிக்குழு கடன் மூலம் வாழ்க்கை தரத்தை பெண்கள் மேம்படுத்தி உள்ளனர்: கடலூர் மாவட்ட ஆட்சியர் பேச்சு

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில், சுயஉதவிக் குழு தினத்தை முன்னிட்டு மாநில அளவிலான மணி மேகலை விருது மற்றும் வங்கிக் கடன் இணைப்புகள் வழங்கி தொடங்கி வைத்தார்.


இதை தொடர்ந்து கடலூர் திருப்பாதி ரிப்புலியூர் புனித வளனார் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் கடலூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன்,மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா,துணை மேயர் தாமரைச்செல்வன் ஆகியோர் முன்னிலையில் மகளிர் திட்டம் வாயிலாக 1253 சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.116.43 கோடி மதிப்பில் வங்கி கடன் இணைப்புகளை வழங்கினார்.


அப்போது மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கூறியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சி பொறுப்பேற்றது முதல் பெண்கள் முன்னேற்றத்திற்காகவும், அவர்கள் பொருளாதாரத்தில் மேன்மையடையும் வகையிலும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.


கடலூர் மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் 13,593 சுய உதவிக் குழுக்களும், நகர்புறங்களில் 4,122 சுயக்குழுக்கள் அமைத்து உதவிக் குழுக்கள் சமூக பொருளாதாரத்தில் வளர்ச்சி பெற்று வருகின்றனர்.

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் 2024&-25ம் ஆண்டு 23,246 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.1384.63 கோடி மதிப்பில் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது. 2025-26ம் ஆண்டிற்கு ரூ.1437 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டத்தில், இதுவரை 1649 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.127.29 கோடி கடன்கள் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுய உதவிக்குழுவை சார்ந்த 17542 பயனாளிகள் பயன்பெற்றுள்ளனர்.


இந்த நிதியை பயன்படுத்தி மகளிர்கள் தங்களது வாழ்வாதாரம்,குடும்ப வாழ்க்கை தரத்தை மேம்ப டுத்தியுள்ளனர். மேலும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பிற்கு ரூ.50 லட்சம் முதல் ரூ.100 லட்சம் வரை வங்கி பெருங்கடனாக வழங்கப்பட்டு வருகிறது

சுய உதவி குழு உறுப்பினர் களை பணியா ளர்களாக கொண்டு காலை உணவு திட்டம், மக்களை தேடி மருத்துவம் போன்ற பணிகளையும் திறம்பட செய்து வருகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் அனு, பயிற்சி ஆட்சியர் மாலதி, மாநகராட்சி மண்டல தலைவர் சங்கிதா, திட்ட இயக்குனர், மகளிர் திட்டம் ஜெயசங்கர், உதவி திட்ட அலுவலர்கள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img