fbpx
Homeபிற செய்திகள்கோவையில் ஆசிய நுண்கலை நகை கண்காட்சி தொடங்கியது

கோவையில் ஆசிய நுண்கலை நகை கண்காட்சி தொடங்கியது

கோவை அவிநாசி ரோட்டில் உள்ள தி ரெசிடென்சி டவர் ஓட்டலில், 54-வது நகை கண்காட்சி இன்று தொடங்கியது. வருகிற 15ம் தேதி வரை தினமும் காலை 10.30 மணி முதல் இரவு 8 மணி வரை கண்காட்சி நடைபெறவுள்ளது.

இதில் ஒரே இடத்தில் நாடு முழுவதிலுமிருந்து 50-க்கும் மேற்பட்ட சிறப்பான வடிவமைப்பும், புகழ் பெற்ற பிராண்ட்களின் நகைகள் இக்கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.

எப்போதும் இல்லாத அளவிற்கு புதிய நகை வடிவமைப்புகள், கவர்ச்சிகரமான நகைகள் இடம் பெற்றுள்ளன. மிக நுட்பமான வேலைப்பாடுகளை கொண்ட தங்க நகைகள், வைர நகைகள் தனித்துவமிக்க வகையில் ஆசிய ஜூவல்ஸ் ஷோவில் இடம் பெற்றுள்ளன.

நுண்கலை தங்க நகைகள், வைரம், பிளாட்டினம், பாரம்பரிய வகை, திருமண அலங்கார நகைகள், ஆன்டிக், அரிய வகை கற்கள் பதித்தவை, குந்தன், ஜவாவு, போல்கி, மற்றும் வெள்ளி நகைகள் இவற்றில் சில ஆகும்.

படிக்க வேண்டும்

spot_img