கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் சின்னவேடம்பட்டி, சிவானந்தபுரம், மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் (காட்டுப்பள்ளிக்கூடம்) 33 சதவீதம் தனியார் பங்களிப்புடன் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.24 லட்சம் மதிப்பீட்டில் 5 வகுப்பறைகளின் மராமத்து பணியினை மேயர் கல்பனா ஆனந்தகுமார் பூமிபூஜை செய்து, தொடங்கி வைத்தார்.
உடன் வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல், உதவி ஆணையர் மோகனசுந்தரி, உதவி செயற்பொறியாளர் செந்தில்பாஸ்கர், மண்டல சுகாதார அலுவலர் ராதாகிருஷ்ணன், உதவி பொறியாளர் சக்திவேல், சுகாதார ஆய்வாளர் லோகநாதன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.