fbpx
Homeபிற செய்திகள்‘முடிதிருத்த நிலையத்துக்கு அனுமதி பெற வேண்டும்’: கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவுறுத்தல்

‘முடிதிருத்த நிலையத்துக்கு அனுமதி பெற வேண்டும்’: கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவுறுத்தல்

கோவை மாநகராட்சியில் முடி திருத்த நிலையம், அழகு நிலையம் ஸ்பா மற்றும் மசாஜ் பார்லர், நீராவி குளியல் தொட்டியுடன் கூடிய முடிதிருத்தம்/முடி சவரம் தொழில் செய்யும் நிலையங்கள் மாநகராட்சியின் அனுமதியின்றி 01.02.2023 முதல் உரிமம் இன்றி நடத்தக்கூடாது என மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் அறிவுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது:
உரிம விண்ணப்ப கடிதத்தில் காவல் துறையினரின் தடையின்மைச் சான்றும், கோவை மாநகராட்சி மாநகர நல அலுவலரின் தடையின்மைச் சான்றும் பெறப்பட வேண்டும். இச்சான்றிதழ்கள் இல்லாவிடில் உரிமத்திற்காக விண்ணப்பிக்க இயலாது.

மேற்காணும் நிறுவனங்கள் தங்களுக்கு உரிய நிறுவனத்திற்கான உரிமத் தொகையானது சாதாரண முடிதிருத்தும் நிறுவனங்களுக்கு ஒரு வருடத்திற்கு ரூ.200/-ம் மற்றும் அதே நிறுவனங்கள் குளிர்சாதன வசதிகள் பொருத்தப்பட்டிருக்குமாயின் ரூ.1000/-ம் மற்றும் அழகு நிலையம், ஸ்பா, மசாஜ் பார்லர் மற்றும் நீராவி குளியல் தொட்டியுடன் கூடிய முடி திருத்தம் போன்ற நிறுவனங்கள் 500 சதுரடி வரை என்றால் ரூ.5000/-ம், 501 முதல் 1000 சதுரடி வரை ரூ.10,000/-ம், 1000 சதுரடிக்கு மேற்பட்ட நிறுவனங்களுக்கு ரூ.15,000/-ம் வருடாந்திர உரிமத்தொகை கட்டணமாக மாநகராட்சியில் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img