கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் கோவை மாநகராட்சி மற்றும் கோவை மெடிக்கல் சென்டர் – மருத்துவமனை சார்பில் மாநகராட்சியில் பணிபுரியும் 1250க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு இலவச மருத்துவ பரிசோதனை முகாமினை மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்.
உடன் மாநகராட்சி துணை ஆணையாளர் சிவகுமார், கோவை மெடிக்கல் சென்டர் – மருத்துவமனையின் தலைவர் நல்லா ஜி.பழனிசாமி, நிர்வாக செயல் இயக்குநர் அருண் பழனிசாமி, கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக், மாமன்ற உறுப்பினர்கள் பொன்னுசாமி, விஜயகுமார், மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோர் உள்ளனர்.



