பல் மருத்துவ சிகிச்சை பயிற்சியின் போது சவீதா மருத்துவ மற்றும் தொழில்நுட்ப அறிவியல் நிறுவனத்தின் சவீதா பல் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையைச் சேர்ந்த மாணவர் சாதனை படைத்துள்ளார்.
இக்கல்லூரியைச் சேர்ந்த அஸ்வின் ஜெய்குமார் ராம் என்ற பயிற்சி மாணவர் பல் மருத்துவத் துறையில் இரண்டு உலக சாதனைகளைப் படைத் துள்ளார். இவரின் அசாத்திய சாதனை கண்டு பல் மருத்துவ சமூகம் ஆச்சரியம் அடைந்துள்ளது.
சவீதா அறுவை சிகிச்சை துறையின் மூத்த விரிவுரையாளர் டாக்டர் ரூபின் எஸ் ஜான் வழிகாட்டுதலின்படி, அஸ்வின் ஜெய்குமார் ராம் இந்த சாதனையை புரிந் துள்ளார்.
இதுவரை எந்த பல் மருத்துவ பயிற்சியாளரும் செய்யாததை அவர் செய்திருக்கிறார். சீரான பற்களுடன் கூடிய உதடு சீரமைப்பை உள்ளடக்கிய முன்னோடி சிகிச்சையான இன்ட்ராஆரல் டெர்மல் பில்லர்ஸ் மற்றும் மோடியோலார் இன்கோ ஆர்டினேஷன் என்னும் சிகிச்சையை அவர் வெற்றிகரமாக செய்துள்ளார்.
இவரின் சாதனைகள் யுனிக் புக்ஸ் ஆப் ரெக்கார்ட், ராபா புக்ஸ் ஆப் ரெக்கார்ட் மற்றும் புகழ்பெற்ற லிம்கா புக்ஸ் ஆப் ரெக்கார்ட் உள்ளிட்ட புத்தகங்களில் அவ ரது சாதனைகள் அங்கீகரிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளன.
இவர் இந்த சாதனையை படைக்க சவீதா மருத்துவ மற்றும் தொழில்நுட்ப அறிவியல் நிறுவனத்தின் வழிகாட்டுதல் குழு அவருக்கு உறுதுணையாக இருந்து அவருக்கு ஆதரவும் ஊக்கமும் அளித்தது.
சிமாட்ஸ் நிறுவனரும் வேந்தருமான டாக்டர் என்.எம். வீரையன், சிமாட்ஸ் இயக்குநர் டாக்டர் தீபக் நல்லசுவாமி, சவீதா பல் மருத்துவக்கல்லூரி டீன் டாக்டர் அரவிந்த் குமார், முனைவர் படிப்புகளின் டீன் டாக்டர் விஷ்ணுபிரியா ஆகியோர் அஸ்வினின் இந்த சாதனைக்கு முக்கிய பங்கு வகித்துள்ளனர்.



