கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.80க்குட்பட்ட கெம்பட்டி காலனி பகுதியில் மாநகராட்சி இடத்தில் போஜ் என்கிற தனியார் நிறுவனத்தின் முழு பங்களிப்புடன் ரூ.72 லட்சம் மதிப்பீட்டில் 25 படுக்கை வசதிகளுடன் கூடிய புதிதாக கட்டப்பட்ட நகர்ப்புற வீடற்றோர் காப்பகத்தின் முதல் தளத்தை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் பாடி, மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆகியோர் திறந்து வைத்தார்.
உடன் துணை மேயர் வெற்றிசெல்வன், மத்திய மண்டல தலைவர் மீனாலோகு, பொதுசுகாதா£ரக்குழு தலைவர் மாரிசெல்வன், மாமன்ற உறுப்பினர் மனோகரன், உதவி ஆணையர் மகேஷ்கனகரா, செயற்பொறியாளர் கருப்பசாமி, உதவி செயற்பொறியாளர் புவனேஸ்வரி, மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.



