கோவை புரூக்ஃபீல்ட்ஸ் பிளாக் பஸ்டர் தீபாவளி போட்டியின் வெற்றியாளர்களுக்கு நேற்று (நவ.30) பரிசு வழங்கப்பட்டது.
தொடர்ந்து 11-வது ஆண்டாக பிளாக்பஸ்டர் தீபாவளி பரிசுக்கான போட்டிகள் நடத்தப்பட்டன.
வாடிக்கையாளர்கள் மாலில் உள்ள எந்த கடையிலும் வார நாட்களில் ரூ.5 ஆயிரம் மற்றும் அதற்குமேல் அல்லது வார இறுதி நாட்களில் அல்லது பொது விடுமுறை நாட்களில் ரூ.10 ஆயிரத்துக்கு மேல் ஷாப்பிங் செய்து, சில கேள்விக்கான பதிலை பூர்த்தி செய்து தங்களது கூப்பன்களை சமர்ப்பிப்பதன் மூலம் இந்த போட்டியில் பங்கேற்க தகுதியுடையவர்களாக அறிவிக்கப்பட்டிருந்தனர்.
பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் ரூ.1500 மதிப்புள்ள வவுச்சர் தொகுப்பும் வழங்கப்பட்டது. ஜிடி ஹாலிடேஸ் வழங்கும் துபாய்க்கான ஹாலிடே பேக்கேஜ் பரிசு ராம்நகர் ஆர்.சத்தியநாராயணன் பெற்றார்.
ஜிடி ஹாலிடேஸ் வழங்கும் பாலிக்கான ஹாலிடே பேக்கேஜ்
ஜிடி ஹாலிடேஸ் வழங்கும் பாலிக்கான ஹாலிடே பேக்கேஜ் பரிசு ஆர்.எஸ்.புரம் ஜீவந்திகாவுக்கு கிடைத்தது. புரூக்ஃபீல்ட்ஸ் வழங்கும் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள ஷாப்பிங் பரிசை சோமனூர் டி.பி.உஷாராணிக்கும், வெல்கேர் வழங்கும் வெல்கேரில் இருந்து பைக் மாதிரி எண் டபிள்யுசி 8006 பரிசை குன்னூர் பிரஜ் விஷ்ணுக்கும் கிடைத்தது.
இந்த போட்டியில் புரூக்ஃபீல்ட்ஸ்-ன் பல்வேறு ஸ்டோர்களில் இருந்து கிஃப்ட் ஹேம்பர்களை வென்ற 20 பேருக்கு, மேபெலில் ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள கிஃப்ட் ஹேம்பர், டிவின் பேர்ட்ஸ்-ல் இருந்து ரூ.4 ஆயிரம் மதிப்புள்ள கிஃப்ட் ஹேம்பர், ஸ்னோ ஃபேண்டஸில் இருந்து ரூ.3 ஆயிரம் மதிப்புள்ள பரிசு வவுச்சர்கள் வழங் கப்பட்டன.
பரிசளிப்பு விழாவில், புரூக்ஃபீல்ட்ஸ் சிஓஓ அஸ்வின் பாலசுப்பிரமணியம், வெல்கேர் நிர்வாக இயக்குநர் மகேஷ், ஜிடி ஹாலிடேஸ் மேலாளர் விஷ்ணுகுமார், ஜேக்கப், கிளஸ்டர் மேலாளர், டிவின் பேர்ட்ஸ் நிதிஷ், ஸ்னோஃபேண்டஸி ஸ்டோர் மேனேஜர் தமிழரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.