புக்வாட்டர் டெக் பிரைவேட் லிமிடெட், அதன் ஆலோசகர் மற்றும் பிராண்ட் தூதவராக விண்வெளி விஞ்ஞானி நம்பி நாராயணன் நியமித்துள்ளது.
நம்பி நாராயணன் கூறியதாவது:
புக்வாட்டருடன், சுத்தமான தண்ணீரை குடிப்பது இனி ராக்கெட் அறிவியல் அல்ல. புக்வாட் டர் இணைக்கப்பட்ட கேன் தொழில்நுட்பம் குடிநீர் தொடர்பான அடிப்படை பிரச் சனைகளை தீர்க்கிறது. அத்தகைய உன்ன தமான நோக்கமும் கொண்ட பிராண்டுடன் இணைந்திருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.
நிலத்தடி நீரின் மோசமான நிலை மற்றும் சுத்தமான தண்ணீருக்கான தேவை ஆகிய கார ணங்களால் இந்தியா தான் பெருகிய முறையில் பாட்டில் தண்ணீரை நம்பியிருக்கிறது.
20லி கேன்களில் இருந்து உட்கொள்ளும் தண்ணீர் பாதுகாப்பானதா? என்ற கேள்வி சமீப காலமாக அதிகளவில் எழுந்து வருகிறது.
தண்ணீர் கேன்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் போது, அழுத்தம் மற்றும் UVகதிர் பாதிப்பு காரணமாக CAN-களுக்குள் மைக்ரோகிராக்குகள் உருவாகின்றன..
புக்வாட்டர் என்பது உலகின் IoT-இயங்கும் தர அடிப்படையிலான நீர் விநி யோக தளமாகும்.
உயர்தர மற்றும் பாதுகாப்பான 20லி குடிநீர் கேன்களைப் பெறு வதற்கு புக் வாட்டர் மிகவும் வசதியான வழியை வழங்குகிறது. ரியல் டைம் ஐஓடி சென்சார்கள் பாட்டில் ஆலைகளில் நிறுவப்பட்டுள்ளன.
புக்வாட்டரின் காப்புரிமை நிலுவையில் உள்ள தொழில்நுட்பமானது, தண்ணீர் கேனில் உள்ள QR ஸ்கேன் செய்து, உற்பத்தி செய்யும் இடங்களில் நிறுவப்பட்டுள்ள சென் சார்கள் மூலம் கேனில் அடைக்கப்பட்ட தண்ணீ ரின் தரத்தை கண்டறிய அனுமதிக்கிறது.
கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள புக் வாட்டர் செயலி மூலம் முன்பதிவு செய்து டெலிவரி பெற்று கொள்ளலாம்.