fbpx
Homeபிற செய்திகள்அரசின் திட்டங்கள் பற்றி மாணவிகளிடம் அமைச்சர் செந்தில்பாலாஜி உரையாடல்

அரசின் திட்டங்கள் பற்றி மாணவிகளிடம் அமைச்சர் செந்தில்பாலாஜி உரையாடல்

கோவை அவிநாசிலிங்கம் பல் கலைக்கழகத்தில் புதுமைப்பெண் திட்டத்திற்குப் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் மின்சாரதுறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். நூற்றுக்கணக்கான மாணவிகள் மற்றும் கல்லூரி நிர்வாகிகள் பங் கேற்றனர்.

அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியதாவது: அவினாசி லிங்கம் பல்கலைகழகத்தில் 452 மாணவிகள் புதுமை பெண் திட்டத்தின் மூலம் பயன் அடைந்துள்ளனர். தமி நாட்டின் நிதி நிலை ரொம்ப மோசமாக இருந்தது.

அப்பொழுதும் தேர்தல் நேரத்தில் சொல்லாத அறிவிப்புகளையும் கொண்டு வர வேண்டும் என்று முதல்வர் நினைத் தார். கல்வியிலும் சரி பொது வாழ்விலும் சரி வாழ்ந்துகாட்டியவர் அவினாசிலிங்கம்.

8500 பேர் ஒரு கல்வி நிறுவனத்தில் பயில் கின்றார்கள். சிறப்பாக கல்வி யினை அளித்து வருகின்றனர். அவிநாசிலிங்கம் கல்வி நிறுவனம் அமைந்துள்ள சாலைக்கு ஐயாவின் பெயரை வைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

அப்போது, இந்த ஆண்டு பள்ளி கல்விக்காக ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு? என்று மாணவிகளை பார்த்து அமைச்சர் கேள்வி எழுப்பினார். பின்னர் அமைச்சரே, பள்ளி கல்வித்துறை வரலாற்றில் அதிகபட்சம் நிதி இந்த ஆண்டு தான் கல்விக்கு அதிக தொகை பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது என்று பதில் அளித்தார்.

கல்லூரிகள்

தொடர்ந்து இரண்டு ஆண்டில் எவ்வளவு அரசு கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளது? என்று கேள்வி எழுப்பிய அமைச்சர் செந்தில்பாலாஜி 39 கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். உயர்கல்வி, பள்ளி கல்வித்துறை, என அனைத்து துறைகளும் சிறப்பாக செயல்படுகின் றன என்றும் அவர் தெரிவித்தார்.

அடுத்து, மகளிர் உரிமை தொகை இந்த ஆண்டு எவ்வளவு நிதி நிலை அறிக்கை ஒதுக்கப்பட்டுள்ளது ? என்ற கேள்வியை முன்வைத்த அமைச்சர், அரசின் திட்டங்கள் எந்த அளவு உள்ளது என்பதை நாமும் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக தான் தொடர்ந்து உங்களிடம் கேள்விகளை எழுப்பி வருகின்றேன். ரூ.7 ஆயிரம் கோடி மகளிர் உரிமை தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்.

தொடர்ந்து அமைச்சர் செந்தில்பாலாஜி பேசியதாவது: நகைக்கடன் தள்ளுபடி ,வேளாண்மை போன்றவற்றிற்கும் அதிக அளவில் இந்த முறை நிதி நிலை அறிக்கையில் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.

நான் முதல்வன் திட்டத்தை முதல்வர் அவர்கள் பிறந்தநாள் போது துவக்கி வைத்தார். கோவை மெட்ரோ ரயில் திட்டதிற்கு 9 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஐ டி பார்க் அமைக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

வேலை வாய்ப்பை சொந்த மாநிலத்தில் கொடுக்க வேண்டும் என் பதற்காக ஐடி பார்க் அமைக்கப்படும் என்று கூறி இருக்கிறார். எழில்மிகு கோவை என்ற சிறப்பான திட்டம் – நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

படிக்க வேண்டும்

spot_img