பெண் காவலர்கள் காவல்துறை பணியில் சேர்க்கப்பட்டு 50 ஆண் டுகள் நிறைவடைந் ததையொட்டி கோவை மாநகர காவல் ஆணை யாளர் வி.பாலகிருஷ்ணன் அறிவுரையின்படி மாநகரில் பணிபுரியும் பெண் காவலர்களுக்கு காவல் வாகனங்களை ஓட்டுவதற்கு ஓட்டுனர் பயிற்சி அளிக்கப்படுகிறது.
அதன் துவக்க விழா இன்று காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. “சிளிறி அவள்” என்ற இந்த நிகழ்வில் கோவை மாநகர காவல் ஆணையர் பால கிருஷ்ணன் கலந்து கொண்டு ஓட்டுனர் பயிற்சியை துவக்கி வைத்து உரையாற்றினார்.
முதல் கட்டமாக கோவை மாநகர தாலுகா காவல் நிலையம் மற்றும் ஆயுதப்படையில் பணி யாற்றி வரும் 150 பெண் காவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதில் நான்கு சக்கர வாகனம் இரு சக்கர வாகனம் இரண்டிற்கும் பயிற்சி அளிக்கப்பட்டு ஓட்டுனர் உரிமம் பெற்று தரப்பட உள்ளது. ஏற்கனவே ஓட்டுநர் உரிமம் உள்ளவர் களுக்கு கூடுதல் பயிற்சி அளிக்கப்படும்.
இந்த நிகழ்வில், கோவை மாநகர் ஆயுதப்படை காவல்துறை ஆணையர் டி.வி.முரளிதரன், தலைமையிட காவல் துணை ஆணையர் ஆர்.சுகாசினி, ஆயுதப்படை காவல் உதவி ஆணையர் ஏ.சேகர், காவல் ஆய்வாளர் எம்.பிரதாப் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



