fbpx
Homeபிற செய்திகள்அவினாசிலிங்கம் 32வது நினைவு சொற்பொழிவு

அவினாசிலிங்கம் 32வது நினைவு சொற்பொழிவு

கோவை அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவ னத்தில், பல்கலைக்கழக நிறுவனர் தி.சு.அவினாசிலிங்கத்தின் 32ம் ஆண்டு நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு பல்கலைக்கழக வேந்தர் பாரதி ஹரிசங்கர் வரவேற்றார். அவினாசிலிங்கம் கல்வி அறக்கட்டளை நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் டி.எஸ்.கே.மீனாட்சி சுந்தரம் தலைமை வகித்து பேசுகையில், அவினாசிலிங்கம் தன்னலமில்லாத சிந்தனையும், தொலை நோக்கு பார்வையும் கொண்டவர். செய்யும் வேலையில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். எளிமையாக வாழ்ந்தவர். அவரைப்போலவே நாமும் நற்செயல்கள் செய்து வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்றார்.

அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவன தமிழ்துறை தலைவர் லலிதா, கல்வி அறக்கட்டளையின் நிர்வாக வாழ்நாள் அறங்காவலர் குழந்தைவேல் ஆகியோரும் நிகழ்ச்சியில் பேசினர்.

அதைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவுப் பரிசை பல்கலைக்கழக வேந்தர் பாரதி ஹரிசங்கர் வழங்கினார். பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள ராமகிருஷ்ண கோயிலில் இசைத்துறை சார்பில் காலை 6 மணி முதல் கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது.

நினைவு மண்டபத்தில் உள்ள அவினாசிலிங்கம் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பதிவாளர் கௌசல்யா நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img