தென்னிந்திய கராத்தே சங்கம் சார்பில் கராத்தே பெல்ட் தேர்வு தர்மபுரியில் நடைபெற்றது. இதில் ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். தென்னிந்திய கராத்தே சங்க தலைவர் நடராஜ், பயிற்சியாளர்கள் மாரியப்பன், சத்யா, புகழேந்தி ஆகி யோர் பெல்ட் தேர்வை நடத்தினர்.
இந்தத் தேர்வில் தர்மபுரி டவுன் செந்தில் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 200 மாணவ, மாணவிகள் பெல்ட் தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு பள்ளி நிர்வாக அலுவலர் சி.சக்திவேல் சான்றிதழ் மற்றும் பெல்ட் வழங்கி பாராட்டினார். தொடர்ந்து தென்னிந்திய கராத்தே சங்கம் சார்பில் செந்தில் பள்ளிக்கு சங்கத் தலைவர் நடராஜ் சுழற்கோப்பையை வழங்கினார். இந்த மாணவ, மாணவிகள் அனைவரும் வருகிற பிப்ரவரி மாதம் நடைபெறும் தென்னிந்திய அளவிலான கராத்தே போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளனர்.
இந்த சாதனை படைத்த மாணவ, மாணவிகளை செந்தில் கல்வி நிறுவனங்களின் தலைவர் செந்தில் கந்தசாமி, துணைத்தலைவர் மணிமேகலை கந்தசாமி, செய லாளர் தனசேகர் மற்றும் பள்ளி முதல்வர், துணை முதல்வர், ஆசிரியர்கள் பாராட்டினர்.