கழக முன்னோடி பேராசிரியர் அன்பழகனின் 3-ம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, கோவை டாடாபாத்தில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் பேராசிரியரின் திருவுருவப் படத்திற்கு திமுகவினர் மலரஞ்சலி செலுத்தினர்.
மாநில சட்டத்துறை இணைச்செய லாளர் கேஎம்.தண்டபாணி, மாவட்ட நிர்வாகிகள் கோட்டை அப்பாஸ், எஸ் எம்.முருகன், கல்பனா, தீர்மான குழு இணைச்செயலாளர் நாச்சிமுத்து, வடக்கு மாவட்ட துணைச்செயலாளர் அசோக் ஆறுக்குட்டி, பகுதி கழக செயலாளர்கள் மார்க்கெட் மனோகரன், குனியமுத்தூர் லோகு, வழக்கறிஞர் அருள்மொழி, விவசாய அணி அக்ரிபாலு, மாவட்ட கழக அலுவலக செயலாளர் ஆர்எஸ்புரம் பூபாலன், எல்பிஎப் காளப்பட்டி விவே கானந்தன், மாவட்ட பிரதிநிதி தேவசீலன், பொறியாளர் அணி பாபு, மருத்துவ அணி அமைப்பாளர் எமரால்டு, கலை இலக்கிய அணி இக்பால், வட்டக்கழக செயலாளர்கள் ராமநாதன், போஸ், தொண்டரணி கணேசன், ஆதிதிராவிடர் நலக்குழு மாவட்ட துணை அமைப்பாளர் சந்திரசேகர், பிரின்ஸ், கவுண்டம்பாளையம் ஸ்ரீதர், குமரன் சுப்பிரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.