இந்திய வானிலை ஆய்வு சங்க உறுப்பினராக கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் வெ.கீதாலட்சுமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்திய வானிலை ஆய்வு சங்க தேசிய கழகம் அவரை தேர்வு செய்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற தேசிய அளவிலான வெப்ப மண்டல வானிலை கருத்தரங்கில் கோவை வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் வெ. கீதாலட்சுமிக்கு இதற்க £ன விருதை, இந்திய வானிலை துறை இயக் குநர் மொகாபத்திரா வழங்கினார்.
வானிலை ஆராய்ச்சியில் உலகலா ளவிய வரைபடத்தில் இந்தியாவை நிலை நிறுத்து வதில் துணைவேந்தர் வெ.கீதாலட்சுமி முக்கிய பங்கு வகித்துள்ளார்.
கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையத்தை நிறுவுவதற்கு அவர் காரணமாக இருந்துள்ளார்.
கடல் மேற்பரப்பு வெப்ப நிலை, திடீர் அலைவு குறியீடு, இந்திய பெருங்கடல் இருமுனை, தமிழகம் முழுவதும் மாவட்ட அளவில் பருவ மழையை கணிக்கும் கருவி உருவாக்கியது போன்ற வானிலை சார்ந்த முக்கிய பங்களிப்புகளை வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் வெ.கீதாலட்சுமி வழங்கியுள்ளார்.
2018ல் தமிழகத்தில் கஜா புயலால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பீடு செய்து, விவசாயத்தை மீட்டெடுக்கும் திட்டத்தை உருவாக்கியது, தமிழகத்தில் வானிலை அடிப்படையில் பயிர் காப்பீடு திட்டங்களை செயல்படுத்தியது போன்றவை இவரது சிறந்த பங்களிப்பாகும்.
மேலும், காலநிலை மாற்றம், தமிழ்நாடு வறட்சி கொள்கை மற்றும் இந்திய அறிவியல் தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு கொள்கை -2020 ஆகியவற்றில் தமிழ்நாடு மாநில செயல்திட்டம் தயாரிப்பதில் முக்கிய பங்கு வகித்துள்ளார். இந்திய வானிலை ஆய்வு சங்க உறுப்பினராக தேர்வாகியுள்ள துணைவேந்தர் வெ.கீதாலட்சுமிக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.



