fbpx
Homeபிற செய்திகள்கூட்டுறவு வாரவிழாவில் இலவச கண் பரிசோதனை முகாம்

கூட்டுறவு வாரவிழாவில் இலவச கண் பரிசோதனை முகாம்

70வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு பொள்ளாச்சி அரிமா சங்க கட்டிடத்தில் நேற்று கூட்டுறவுத்துறை சார்பில் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை, அரிமா சங்கம் மற்றும் கோவை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய கண் பரிசோதனை முகாமில் 170 நபர்களுக்கு கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் 67 நபர்கள் இலவச கண்புரை அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டு கோவை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இம்முகாமில் கே.சண்முகம் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்), ந.கோபாலகிருஷ்ணன் (துணைப்பதிவாளர் – பொள்ளாச்சி சரகம்), துணைப்பதி வாளர் அலுவலகக் கண்காணிப்பாளர்கள், சங்க செயலாளர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img