இயற்கையின் கருவூலம் அதிசயங்களை கொண்டது. அந்த எண்ணற்ற எண்ணற்ற அதிசயங்களில், பட்டுப்புழுவிலிருந்து வெளிவரும் பட்டு நூலால் நெய்யப்படும் பளபளப்பான தூய்மையான பிரகாசம் கொண்ட ஆடையும் ஒன்றாகும். மனிதகுலத்தின் முன்னேற்றத்திற்கான தேடலில், பட்டு விவசாயம் அல்லது பட்டுவளர்ப்பு ஒரு முக்கிய கண்டுபிடிப்பாகும்.
தமிழ்நாட்டில், பட்டுத்தொழிலில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மற்றும் பட்டு பட்டு தொழில்முனைவோர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, தொழில் மற்றும் வணிகத் துறையின் கீழ் செயல்பட்டு வந்த பட்டுவளர்ச்சிப் பிரிவு, 1979-ஆம் ஆண்டு முதல் சேலத்தை தலைமையிடமாகக் கொண்டு தனி இயக்குநரகமாக செயல்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டை வெண்பட்டு உற்பத்தியில் முன்னோடி மாநிலமாக உருவாக்குதல், மல்பெரி சாகுபடி செய்யப்படும் பரப்பினை அதிகரித்தல், கூடுதலான விவசாயிகள் தொழில்முனைவோர்களை மற்றும் பட்டுத்தொழிலில் ஈடுபடச் செய்து அதன்மூலம் அவர்களது பொருளாதார வளர்ச்சியை உயர்த்துதல், சிறந்த சமூகப் பொருளாதார நிலையை அடைவதற்கு வேலையில்லா இளைஞர்களை பட்டுப்புழு வளர்ப்பு / பட்டுநூற்பு தொழிலில் ஈடுபட ஊக்குவித்து உதவுவதன் மூலம் வேலைவாய்ப்பினை உருவாக்குதல் ஆகியவை பட் டுவளர்ச்சித் துறையின் முக்கிய நோக்கங்களாகும்.
தரமான பட்டுக்கூடு உற்பத்தியை அதிகரிக்க உயர் விளைச்சல் தரும் மல்பெரி இரகங்களை பயிர் செய்ய விவசாயிகளுக்கு ஊக்கமளித் தல், மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்கள் மற்றும் நடைமுறைகளை கடைப்பிடிப்பதன் மூலம் உற்பத்தி செலவி னங்களைக் குறைத்து தரமான பட்டுக்கூடுகள் மற்றும் கச்சாப்பட்டுநூலின் உற்பத்தித் திறனை அதிகரிக்க பங்குதாரர்களை ஊக்குவித்தல், மல்பெரி சாகுபடி, பட்டுப்புழு வளர்ப்பு மற்றும் பட்டுநூற்பு போன்ற செயல்பாடுகளில் திறன் பயிற்சி மற்றும் தொழில்நுட்ப வழிகாட்டுதல் வழங்குதல், மாநி லத்தில் பட்டுத்தொழிலின் வளர்ச்சிக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளை தமிழ்நாட்டில் பட்டுத்தொழில் மேம்பாட்டிற்காக பட்டுவளர்ச் சித் துறை மேற்கொண்டு வருகிறது.
மாநிலத்தின் பட்டுத் தொழில் வளர்ச்சிக்காகவும், விவசாயிகள் மற்றும் பட்டு தொழில்முனைவோர்களுக்கு ஆதரவளிக்கும் நோக்கத்திலும், நிலையான பட்டுவளர்ச்சி நடைமுறைகளை ஊக்குவிக்கும் வகையிலும், பல்வேறு திட்டங்கள் மற்றும் முயற்சிகளை இத் துறை செயல்படுத்தி வருகிறது. இவற்றுள் மல்பெரி நாற்றுகள், தோட்டம் மற்றும் பட்டுப்புழு வளர்ப்பு உபகரணங்கள், புழுவளர்ப்பு மனைகள் மற்றும் பட்டுநூல் உற்பத்தி அலகுகள் போன்ற பட்டுவளர்ப்பு சார்ந்த உட்கட்டமைப்புகளுக்கு மானிய உதவிகள் வழங்குதல் ஆகியனவும் அடங்கும்.
பட்டுவளர்ச்சித் துறை இயக்ககம் தமிழ்நாட்டில் பட்டுத் தொழில் மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது. பட்டு விவசாயிகளுக்கு ஆதரவளித்து மாநிலத்தில் பட்டுத் தொழிலின் வளர்ச்சியை மேம்படுத்திடவும், பட்டு விவசாயிகளின் நலனை உறுதி செய்திடவும். மாநில அரசு பல்வேறு பயனாளிகள் சார்ந்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் பட்டுவளர்ச்சித்துறை சார்பில் மல்பெரி புதுநடவு மேற் கொண்டு, புதிய பட்டுப்புழு வளர்ப்பு மனை அமைத்து பட்டுத் தொழிலில் ஈடுபட்டு வரும் பட்டு விவசாயிகளுக்கு மாநில திட்டத்தின் கீழ் 1007.25 ஏக்கரில் மல்பெரிநடவு செய்த 650 பட்டுவிவசாயிகளுக்கு மானியமாக ரூ.113.885 இலட்சம் விடுவிக்கப்பட்டு பயன டைந்துள்ளனர். 124 தனிபட்டுப் புழுவளர்ப்புமனை அமைத்த 124 பட்டுவிவசாயிகளுக்கு மானியமாக ரூ.209.85 இலட்சம் விடுவிக்கப்பட்டு பயனடைந் துள்ளனர்.
196 பட்டுவிவசாயிகளுக்கு ரூ.105.90 இலட்சம் மதிப்பில் நவீனபுழுவளர்ப்பு தளவாடங்கள் வழங்கப்பட்டு பயனடைந்துள்ளனர். மண்புழுஉர குடில் அமைத்த 39 பட்டு விவசாயிகளுக்குரூ.4.875 இலட்சம் மானியத் தொகை விடுவிக்கப்பட்டு பயன டைந்துள்ளனர். தமிழ் நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பின்படி, ராசிபுரம் வட்டாரம், முத்துக்காளிப்பட்டியில் 24.09.2021 அன்று வனத்துறை அமைச்சர் அவர்களால் அரசு பட்டுக்கூடு அங்காடி திறந்து வைக்கப்பட் டது. 8 மாவட்டத் திலிருந்து 5,360 விவசாயிகளால் 241.285 மெ.டன் பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டு ரூ.1189.921 லட்சம் பணபரிவர்த்தனை செய்யப்பட்டு லெவித் தொகையாக ரூ.17.308 இலட்சம் அரசுக்கு வருவாய் செலுத்தப்பட்டுள்ளது.
மேலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர் கள் ஆட்சிப் பொறுப்பேற்ற இரண்டரை ஆண்டு காலத்தில் நாமக்கல் மாவட்டத்தில் பட்டு வளர்ச்சித்துறையின் மூலம் 1,009 பட்டு விவசாயிகளுக்கு ரூ.434.51 இலட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம், ஆர்.புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்த பட்டு விவசாயி பிரபு தெரிவித்ததாவது:
நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வட்டத்துல ஆர்.புதுப்பட்டி கிராமத்துல பட்டு விவசாயம் செஞ்சிட்டு வர்றோம். பட்டு விவசாயம் அப்பா காலத்துல இருந்து 35 வருசத்துக்கு மேல பண்ணிட்டுவறோம். அப்பா காலத்துல பட்டுக்கூடு விற்பனைக்காக வெளி மாநிலத்துல கொண்டுபோயி பட்டுக்கூடு விற்பனை செஞ்சிட்டிருந்தோம். அதுக்கு பிறகு தர்மபுரி மார்க்கெட்ல பட்டுக்கூடு விற்பனை செஞ்சிட்டிருந்தோம். தர்மபுரி மார்க்கெட் எங்களுக்கு 100 கி.மீ தூரத்தில இருக்கு. அதனால எங்களுக்கு நேர விரையமும் பொருள் செலவும் அதிகமாக இருந்தது. முதலமைச்சர் அவர்கள் தேர்தல் அறிக்கையில் மாவட்டத்திற்கு ஒரு பட்டுக்கூடு விற்பனை அங்காடி என்ற வாக்குறுதியை குடுத்திருந்தாங்க.
நம்ம முதல்வர். தேர்தல ஜெயித்து முதல்வர் ஆன அப்பறம் எங்களுக்கு இங்க பட்டுக்கூடு அங்காடியை நிறுவி குடுத்து இருக்காங்க. பட்டுக்கூடு அங்காடி நிறுவி தந்த மாண்புமிகு முதலமைச்சர் ஐயாவுக்கு ரொம்ப நன்றி. இங்க பட்டுக்கூடு அங்காடி வந்த பிறகு பட்டு விவசாயம் பற்றி விவசாயிகள் மத்தியில நெறைய விழிப்புணர்வு ஏற்பட்டு இருக்குது. இங்க விற்பனை செய்ய மார்கெட் பக்கத்துல இருக்குனு உள்ளுர் விவசாயிகள் இப்போ அதிகமாக பட்டு விவசாயம் செய்யறாங்க. இதுபோல விவசாயிகளுக்குனு அங்காடி அமச்சு தந்த மாண்புமிகு முதலமைச்சர் ஐயா அவர்களுக்கும், சுற்றுலா துறை அமைச்சர் அவர்களுக்கும், எம்.பி அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவிச்சுக்கறோம். இவ்வாறு அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
நாமக்கல் மாவட்டம், ஆயிபாளையம் பகுதியை சேர்ந்த பட்டு விவசாயி ராஜாகுமார் தெரிவித்ததாவது:
நான் 2 ஏக்கர் பரப்பளவில் வி1 இன மல்பெரி நடவு செய்துள்ளேன். பட்டுவளர்ச்சித் துறையின் மூலம் மல்பெரி நடவு செய்ய ரூ.21,000-, புழு வளர்ப்பு மனை அமைக்க ரூ.1,20,000-, புழு வளர்ப்பு தளவாடங்களுக்கு ரூ.52,000- என மொத்தம் ரூ.1.93 இலட்சம் மானியமாக வழங்கப்பட்டது.
இத்தொகையினை கொண்டு மல்பெரி நடவு செய்ததன் மூலம் 2,600 க்கும் மேற்பட்ட முட்டைகள் உற்பத்தி செய்து 2,340 பட்டுக் கூடுகளை அறுவடை செய்தேன். பட்டுக் கூடுகளை விற்பனை செய்ததன் மூலம் ரூ.11.46 இலட்சம் வருமானம் கிடைத்தது. எங்களை போன்ற பட்டு விவசாயிகளுக்கு ஆதரவளிக்கும் நோக்கத்திலும், நிலையான பட்டுவளர்ச்சி நடைமுறைகளை ஊக்குவிக்கும் வகையிலும் இது போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
நாமக்கல் மாவட்டம், இராமாபுரம் பகுதியை சேர்ந்தபட்டு விவசாயி கைலாசம் தெரிவித்ததாவது:
நான் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் எம்.ஆர்.2 இன மல்பெரி நடவு செய்துள்ளேன். பட்டுவளர்ச்சித் துறையின் மூலம் மல்பெரி நடவு செய்ய ரூ.21,000-, புழு வளர்ப்பு மனை அமைக்க ரூ.1,20,000-, புழு வளர்ப்பு தளவடாங்களுக்கு ரூ.52,000- என மொத்தம் ரூ.1.93 இலட்சம் மானியமாக வழங்கப்பட்டது. இந்த தொகையினை பயன்படுத்தி எனது நிலத்தில் மல்பெரி நட்டு விவசாயம் செய்து வருகிறேன்.
இதன் மூலம் 1,200 க்கும் மேற்பட்ட முட்டைகள் உற்பத்தி செய்து, 900 பட்டுக் கூடுகளை அறுவடை செய்தேன். பட்டுக் கூடுகளை விற்பனை செய்ததன் மூலம் சுமார் ரூ.4.60 இலட்சம் வருமானம் கிடைத்தது. எங்களை போன்ற பட்டு விவசாயிகளுக்கு மானியம் வழங்குவதால் குறைந்த முதலீட்டில் பெரிய வருமானம் ஈட்ட முடிகிறது. மானியங்களை வழங்கி எங்களை போன்ற விவசாயிகளை பாதுகாக்கின்ற தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம்,
நாமக்கல் மாவட்டம்.



