நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் மூன்றாவது முறையாக வெற்றி பெற்ற ஆ ராசாவை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எஸ் சி துறை மாநில துணைத் தலைவர் வடவள்ளி ஆர் காந்தி பவானிசாகரில் வெள்ளியன்று மாலை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.
அப்போது பவானிசாகர் பேரூராட்சி காங்கிரஸ் கமிட்டி சார்பாக காமராஜர் பேருந்து நிலையத்திற்கும் வணிக வளாகத்திற்கும் ஏற்கனவே இருந்த காமராஜர் பேருந்து நிலையம் என இருந்த பெயர் பலகையை மீண்டும் வைக்கக் கோரிக்கை வைத்தார்.
உடன் பி சி சங்கர் மாநில பொதுச் செயலாளர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எஸ் சி துறை, பிஎஸ் நாகமயன் தலைவர் பவானிசாகர் பேரூராட்சி தலைவர், வேலுமணி பவானிசாகர் வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர், மோகன் மாநிலச் செயலாளர் தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்சி துறை, நிர்வாகிகள் தங்கராஜ், கோடை பாளையம் செல்வராஜ், சிதம்பரம், சிவக்குமார் மற்றும் பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.