புதுக்கோட்டையில் புதுப்பிக்கப்பட்ட சுகாதார வளாகத்தை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்ரமராஜா திறந்து வைத்தார்.
புதுக்கோட்டையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக குளியலறை மற்றும் ஆண், பெண் கழிப்பிடவசதியுடன் கூடிய பொது சுகாதார வளாகம் குமாரகிரி பஞ்சாயத்து நிர்வாகம் மூலம்
கட்டப்பட்டது. சிறிது காலம் செயல்பட்டு வந்த இந்த சுகாதார வளாகம் பராமரிப்பு பணிகளில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக பொதுமக்களால் பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டது.
இதையடுத்து புதுக்கோட்டை அனைத்து வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தினர் ஒருங்கிணைந்து மாதாந்திர கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகம் மற்றும் குமாரகிரி பஞ்சாயத்து ஆகியவற்றை அணுகி வியாபாரி சங்கத்தின் மூலம் சுகாதார வளாகத்தை பராமரித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர மனு அளித்தனர். இதையடுத்து குமாரகிரி பஞ்சாயத்து நிர்வாகத்தினர் புதுக்கோட்டை அனைத்து வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தினருக்கு பொது சுகாதார வளாகத்தை பராமரிப்பு செய்து நிர்வகித்து வர அனுமதி அளித்தனர்.
தற்போது இந்த சுகாதார வளாகம் புதுக்கோட்டை அனைத்து வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் புதுப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த பொது சுகாதார வளாகத்தை புதுக்கோட்டையில் நடந்த ஒரு வியாபாரியின் இல்ல திருமண நிகழ்ச்சிக்கு வருகை தந்த தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்ரமராஜா திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாநில தலைமை செயலாளர் பேராசிரியர் ராஜ்குமார், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில கூடுதல் செயலாளர் காளிதாசன், தூத்துக்குடி மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன், கன்னியாகுமரி மண்டல தலைவர் வைகுண்ட ராஜா, தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் சோலையப்ப ராஜா, மாநில இணை செயலாளர் மற்றும் புதுக்கோட்டை அனைத்து வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் பீட்டர், தொழிலதிபர் வேல்ராஜ், குமாரகிரி பஞ்சாயத்து தலைவர் ஜாக்சன் துரைமணி, புதுக்கோட்டை அனைத்து வியாபாரிகள் முன்னேற்ற சங்க செயலாளர் முருகன், துணைத் தலைவர்கள் சர்க்கரை, பெரியசாமி, பொருளாளர் ராபின்சன், துணை செயலாளர்கள் வியாகப்பன், கணேசன், கருப்புசாமி, லெனின், இணை செயலாளர்கள் டேவிட் குமரன், சக்தி லிங்கம், கௌரவ ஆலோசகர்கள் அருள்ராஜ், சங்கர், வேலாயுதம், ராமச்சந்திரன், செந்தில் ஆறுமுகம் மற்றும் ஆதிநாராயணன், வியாபாரிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.