விஜயதசமி நாளில் கல்வியின் முதல் அடியாக கருதப்படும் வித்யாரம்பம் விழா கோவை அவிநாசி சாலையில் உள்ள இங்கிலீஸ் பார்ட்னர் (English Partner) நிறுவனத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 3 முதல் 4 வயதுடைய சிறார்களுக்கு கல்வியின் பயணத்தை இனிதே தொடங்கி தரும் நோக்கில் பாரம்பரியமும் புதுமையும் கலந்த முறையில் இந்த விழா நடத்தப்பட்டது.

2020-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த நிறுவனம் இன்று 5-வது ஆண்டை எட்டியுள்ள நிலையில் ஆங்கில கற்றலில் தனித்துவமான அணுகுமுறையை அறிமுகப்படுத்தி தொடங்கிய நாளிலிருந்தே மாணவர்களின் ஆங்கிலத் திறனை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இங்கிலீஸ் பார்ட்னர் நிறுவனம் வாயிலாக பயிற்சி பெற்றுள்ளனர். மேலும் English Partner Edge வழியாக மட்டும் 25,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன் அடைந்துள்ளனர். இந்த சாதனைகளின் மத்தியில், நிறுவனத்தின் 5 ஆண்டு நிறைவை முன் னிட்டு வித்யாரம்பம் விழா நடத்தப்பட்டது. குழந்தைகள் தங்கள் வய துக்கேற்ற எளிய முறையில் விளையாட்டு போன்று கற் றல் அனுபவிக்கின்றனர். மேலும் இயல்பான ஆர்வத் தையும், விளையாட்டு தன்மையையும் கற்றலோடு இணைத்து வழங்குவது இந்த பாடத்திட்டத்தின் சிறப்பு ஆகும்.



