கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட் டத்தில் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கூறுகையில், “நேற்று நடைபெற்ற கூட்டத் தில் பொது மக்களிடமிருந்து 740 மனுக்கள் பெறப்பட்டன. பொது மக்களின் கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதி யான மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வருவாய்த்துறை சார்பில் திட்டக்குடி வட்டம், தீவளூர் கிராமத்தை சேர்ந்த 3 பழங்குடியினர் பயனாளிகளுக்கு இலவச வீட் டுமனைப் பட்டாவிற் கான ஆணையினையும், மாற்றுத்திறன் முன்னாள் படைவீரருக்கு ரூ.1,14,400 மதிப்பீட்டிலான மின்கலன் பொருத் தப்பட்ட சிறப்பு சக்கர நாற்காலியும் வழங்கப்பட்டுள்ளது” என்றார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் லதா, தனித்துணை ஆட்சியர் தங்கமணி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சங்கர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.



