Homeபிற செய்திகள்சட்ட விரோதமாக பணம் பிடித்தம்: பாரதியார் பல்கலை. தொழிலாளர்கள் செப்டம்பர் 7ம் தேதி ஆர்ப்பாட்டம்

சட்ட விரோதமாக பணம் பிடித்தம்: பாரதியார் பல்கலை. தொழிலாளர்கள் செப்டம்பர் 7ம் தேதி ஆர்ப்பாட்டம்

பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பள பணத்தில், சட்ட விரோதமாக பணம் பிடித்தம் செய்யும், அதிகாரி களை கன்டித்து வரும் 7ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.
கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் பணியாற்றும், தொழிலா ளர்கள் சங்க அவசர பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சங்க பொதுச்செயலாளர் ரமேஷ் குமார், சங்க தலைவர் சிந்தாமணி மற்றும் செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:
கடந்த மாதம் தொழிலாளர்க ளின் சம்பள கணக்கிலிருந்து பாரதியார் பல்கலைக்கழக நிர்வாகம், ரூபாய் 1000 முதல் 3000 வரை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, சட்ட விரோதமாக பிடித்தம் செய்துள்ளது. இது தொடர்பாக பதிவாளரிடம் கேட்டபோது இ.எஸ்ஐ நிறுவனத்திற்கு கட்டிய தொகை என்று குறிப்பிட்டார். அது சட்டப்படி தவறு என்று சங்கத்தால் சுட்டிக்காட்டப்பட்டது.மேலும் கடந்த 11.8.2026 அன்று நடந்த குறை தீர்ப்பு கூட்டத்தில் தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த பணத்தை ஆட்சி குழு கூட்டத்தில் அனுமதி பெற்று திருப்பி செலுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் வருகின்ற மாதங்களில் அவ்வாறான அபராத தொகைகளை பிடிக்க மாட்டோம் என்றும் இஎஸ்ஐ சட்டத்தால் அனுமதிக்க கூடிய 0.75% மட்டுமே பிடித்தம் செய்யப்படும் என்று உறுதியளித்தார். ஆனால் இந்த மாதம் 02.09.2026அன்று அனைவருக்கும் சம்பளம் போடப்பட்ட போது . இ.எஸ்.ஐ கான அபராதத் தொகை ரூபாய் 500 பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. பதிவாளர் சொன்ன அந்த வாக்குறுதியை காப்பாற்றவில்லை/
இது தொடர்பாக சங்கம் சார்பில் கோவை மாவட்ட இ.எஸ்.ஐ துணை இயக்குனர் மற்றும் இணை இயக்குனர்களிடம் தொடர்பு கொண்டு பேசிய போது அவர்கள் பாரதியார் பல்கலைக்கழகத்தில் நிதி அலுவலகத்தில் உள்ள மோகன்ராஜ் என்பவரிடம் இவ்வாறு பிடித்தம் செய்வது சட்டப்படி தவறு ஏற்கப்பட மாட்டாது என்றும் அவ்வாறு தொடர்ந்து பிடிக்கப்படும் பட்சத்தில் உரிய அனுமதி பெற்று, ஆய்வு நடத்தி அதனை தொழிலாளர்களுக்கு திருப்பி பெற்று வழங்கி விடுவோம், மேலும் அவ்வாறு செய்ததற்காக அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்துள் ளார்கள் ஆனால் அதையும் மீறி மோகன்ராஜ் தொழிலாளர்களிடம் 500 ரூபாய் பிடித்தே தீருவேன் என்று பிடிவாதமாக செய்துள்ளார். அதற்கு பதிவாளரும் ஒப்புதல் கொடுத் துள்ளார். இதனை தொழிற்சங்கம் கண்டிக்கிறது. பல்கலைக்கழகத்தின் இந்த போக்கை கண்டித்து வரும் 7ம் தேதி, முதல் கண்டன முழக்க ஆர்ப்பாட்டம் மற்றும் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img