கோவை மாவட்டத்தில், அன்னூர் வட்டாரம் பசூர் ஊராட்சியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்டம் 2025-26 ஆம் நிதி ஆண்டின் வாழ்வாதார தொகுப்பின் கீழ் செம்பருத்தி மற்றும் மகாலட்சுமி மகளிர் சுய உதவிக் குழுவினரின் மூலம் செயல் படுத்தப்பட்டு வரும் எம்.எஸ் கார்மெண்ட்ஸ் நிறுவனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் க.கிரியப்பனவர் தலைமையில் செய்தியாளர் பயணம் மேற்கொள்ளப்பட்டது. இச்செய்தியாளர் பயணத்தின் போது அன்னூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உமாசங்கரி, மகேஸ்வரி, வட்டாட்சியர் மதிய முனா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இச்செய்தியாளர் பயணத்தின் போது மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:
2021-2022-ஆம் ஆண்டு ரூ.400 கோடி மதிப்பீட்டில் 6,962 மகளிர் சுயஉதவிக் குழுக்க ளுக்கு கடனுதவி வழங்கஇலக்கு நிர்ணயிக் கப்பட்டதைத் தொடர்ந்து, ரூ.630 கோடி மதிப்பீட்டில் 8,022 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. 2022-2023ஆம் நிதியாண்டில் ரூ.750 கோடி மதிப்பீட்டில் 9282 மகளிர் சுயஉதவிக் குழுக்க ளுக்கு கடனுதவி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ரூ.769.66 கோடி மதிப்பீட்டில் 9,436 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கடனு தவி வழங்கப்பட்டுள்ளது. 2023-2024ஆம் நிதியாண்டில் ரூ.924 கோடி மதிப்பீட்டில் 11234 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கடனுதவி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ரூ.923.09 கோடி மதிப்பீட்டில் 11213 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. 2024-2025-ஆம் ஆண்டு (31.10.2025 வரை) ரூ.1983 கோடி மதிப்பீட்டில் 22,236 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கடனுதவி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ரூ.194108 கோடி
மதிப்பீட்டில் 28,179 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் மகளிர் திட்டத்தின் மூலம் கடந்த நான்கரை ஆண்டுகளில் ரூ.4263.83 கோடி மதிப்பீட்டில் 56,850 மகளிர் சுயஉதவிக் குழுக்க ளுக்கு கடனுதவி வழங்கப்பட்டுள் ளது.
கோவை மாவட்டம் அன்னூர் வட்டாரம் பசூர் ஊராட்சியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக் கம் மகளிர் திட்டம் 2025-26 ஆம் நிதி ஆண்டின் வாழ் வாதார தொகுப்பின் கீழ் எம்.எஸ் கார்மெண்ட்ஸ் நிறுவனத்தை செம்பருத்தி மற்றும் மகாலட் சுமி மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் 12 பேர் ஒன் றிணைந்து செயல்படுத்தி வரு கின்றனர். இவர்கள் மகளிர் திட்டத்தின் மூலம் தையல் பயிற்சி பெற்று ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் மகளிர் சுய உதவிக் குழுக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக வழங்கப்படும் சமுதாய முதலீட்டு நிதியிலிருந்து ரூ.4இலட்சம் கடன் உதவி பெற்று தையல் நிலையம் துவங்கி, திருப்பூர் மாவட்டம் தேசிய ஆடையரக தொழில்நுட்ப நிறுவனத்தின் கீழ் செயல்படும் நிறுவனங்களில் இருந்து பணி ஆணைகளைப் பெற்று வருகின்றனர்.Banians T-shirt, Lowyer Towel ஆகியவை தயார்செய்யும் சிறு தொழில் செய்கின்றனர்.

இவர்களுக்கு மகளிர் திட்டம் மூலம் தையல் எந்திரம் பழுது நீக்கும் பயிற்சியும் சமுதாயத் திறன் பள்ளி பயிற்சியின் மூலமாக வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் நிறுவனத்தின் பெயரிலேயே நேரடியாக பணி ஆணைகளைப் பெற்று ஏற்றுமதி செய்யும் தரத்திற்கு தங்களது நிறுவனத்தை உயர்த்த வேண் டும் என்பதே இவர்களின் இலட்சியமாக செயல்பட்டு வரு கின்றனர். இந்நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற் கொள்ளப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பின்னர் எம்.எஸ் கார்மெண்ட்ஸ் நிறுவனம் – மகாலட்சுமி மகளிர் சுய உதவிக் குழுவை சேர்ந்த சந்திரிகா தெரி வித்ததாவது:
எனது பெயர் சந்திரிகா, நான் அன்னூர் ஊராட்சியில் பசூர் கிராமத்தில் எனது கணவரு டன் வசித்து வருகிறேன். நான் மகாலெட்சுமி மகளிர் சுய உத விக்குழுவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக உறுப்பினராக உள்ளேன். நான் வசிக்கும் பகுதி யானது விவசாயம் சார்ந்த தொழில் செய்யும் கிராமம் ஆகும். அதனால் திருப்பூர் பகு தியில் உள்ள பின்னாலடை தொழிலுக்கு தினமும் சென்று வந்தேன். ஒரு சில நாட்களில் இரவு பணி முடிந்து வீட்டுக்கு வருதற்கு வெகுநேரம் ஆகிவிடும்.
இந்நிலையில் மகளிர் திட்டம் அன்னூர் வட்டாரம் அவர்களின் மூலமாக எனது குழுவிற்கு சிறிய அளவிலான யூனிட் அமைக்க பசூர் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு சமுதாய முதலீட்டு நிதியலிருந்து சுமார் 2 லட்சம் வழங்கப்பட்டது. அதன் மூலம் தையல் இயந்திரம் பெற்று தற்சமயம் நான் மற்றும் எனது குழுவில் உள்ள உறுப்பினர்கள் இந்நிறுவனத்தை நடத்தி வருகிறோம். இதனால் வெளியே வேலைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை இல்லை. நல்ல வருமானமும் கிடைக்கின்றது. மேலும், எங்கள் வீடுகளுக்கு அருகாமையிலே இந்நிறுவனம் இருப்பதால் வேலை முடிந்து சீக்கிரம் வீட்டிற்கும் செல்லமுடிகிறது. தற்சமயம் மகளிர் திட்டம் மூலமாக திருப்பூர் பின்னாலடை ஏற்றுமதியின் மூலம் ஆர்டர்கள் பெறப்பட்டு எங்கள் குழுவின் மூலம் இந்த தொழிலை மேற்கொண்டு வருகிறோம். இதனால் எங்கள் குழுவில் உள்ள அனைவரின் வாழ்வாதாரமும் முன்னேற்றம் அடைந்துள்ளது. இந்த திட்டத்தை தந்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு எங்கள் குழுவினரின் சார்பில் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்தார்.



