கோயம்புத்தூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம் (CDCA) தனது 67வது ஆண்டு விழாவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தின் எஸ்என்ஆர் அரங்கில் சிறப்பாக நடத்தியது.
இந்த விழாவில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் டி.ஜே.ஸ்ரீநிவாசராஜ் தலைமை விருந்தினராகவும், கௌரவ செயலாளர் யு.பகவந்தாஸ் ராவ் சிறப்பு விருந்தி னராகவும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
மாலை 5.30 மணிக்கு தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் கோயம்புத்தூர் மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவர் டி.லஷ்மி நாராயணசாமி, கௌரவ செயலாளர் ஆர்.சந்திர மௌளி, துணைத் தலைவர்கள் ஆர்.சுந்தர், என்.நாராயணன் மற்றும் கே.ஆர். தினேஷ், இணைச் செயலாளர்கள் கே. மகாலிங்கம் மற்றும் சுரேஷ் குமார், பொருளாளர் சுந்தர் ஆகியோர் உட்பட நிர்வாகக் குழு உறுப் பினர்கள் மற்றும் இணைந்த கிளப் பிரதி நிதிகள் கலந்து கொண்டனர்.
விழாவில் தலைமை மற்றும் சிறப்பு விருந்தி னர்களுக்கு மரியாதை செய்து நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன.
அவர்கள் தங்கள் உரையில், அடித்தள மட்டத்தில் கிரிக்கெட்டை வளர்ப்பதில் கோயம்புத்தூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம் மேற்கொண்டு வரும் தொடர் முயற்சிகளை பாராட்டியதுடன், மாநில மற்றும் தேசிய கிரிக்கெட்டில் கோவையின் சிறப்பான பங்களிப்பையும் குறிப்பிட்டனர்.
திறமையான வீரர்களை கண்டறிதல், உட்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் நிர்வாக சிறப்பிற்கு தொடர்ந்து முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினார்.
பின்னர் உறுப்பினர்களிடையே கலந்துரையாடலும் சந்திப்பும் நடைபெற்றது.



