தமிழகம் நாட்டின் பொருளாதாரத்தில் இரண்டாவது இடத்தையும் ஒட்டுமொத்த ஜவுளி உற்பத்தியில் பெரும் பங்கையும், ஜவுளி வேலைவாய்ப்பில் 28 சதவீதத்தையும் நூல் உற்பத்தியில் 45 சதவீத்தையும் விசைத்தறிகளில் 22 சதவீத்தையும், பருத்தி பின்னலாடை உற்பத்தியில் 70 சதவீதத்தையும் கொண்டு முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 2030ல் தமிழகம் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தை அடைய ஜவுளித்துறை முக்கிய பங்குவகிக்கும் வகையில் பல்வேறு உன்னத திட்டங்களை ஆட்சி பொறுப்பு ஏற்றதிலிருந்து செயல்படுத்தி வருகிறார்.
ஆனால், உலகநாடுகளில் ஏற்பட்டுவரும் பல்வேறு பொருளாதார வியாபாரம் மற்றும் போர் சிக்கல்களினாலும் ஆகஸ்ட் 2025 முதல் இந்திய பொருட்களின் மீது அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத வரிகளினாலும் சமீபத்தில் வங்கதேசத்தில் நிலவிவரும் அசாதாரண சூழ்நிலைகளினாலும் இந்தியா, குறிப்பாக தமிழக ஏற்றுமதி மற்றும் தொழில்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றது.
தமிழகஅரசின் தனித்துவ காற்றாலை மின்சார கொள்கைகளி னால் 1990 முதல் மிகுந்த மூலதனங்களை காற்றாலைகளில் ஈர்த்து தமிழகம் தொடர்ந்து முதன்மை மாநிலமாக திகழ்ந்து வருகிறது. பெரும்பாலான காற்றாலைகள் 20 ஆண்டுகளுக்கு முன் னால் நிறுவப்பட்டவைகள் ஆகும்.
இந்த காற்றாலைகளில் உற்பத்தியாகும் மின்சாரத்தை உபயோகபடுத்தினாலும் பேங்கிங் என்றுசொல்லப்படும் வைப்புதிட் டத்தை எடுக்கவும் 2025 ல் கொண்டு வரப்பட்ட புதிய காற்றாலை மின்சார கொள்கை ஏற்கனவே நஷ்டத்தில் இயங்கிவரும் ஜவுளி ஆலைகளுக்கு ஒரு பேரிடியாக அமைந்தது.
இக்கொள்கை அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து தொழில்துறையினர் குறிப்பாக தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் பழைய காற்றாலைகளிலிருந்து தொடர்ந்து மின்சாரத்தை எடுக்கவும் காற்றாலைகளின் காலக் கெடுவை வரையறைக்குஉட்பட்டு 40 ஆண்டுகள் வரை நீட்டிக்கவும் தொடர்ந்து அரசை வேண்டி வந்தனர்.
தற்போது விடுத்துள்ள பத்திரிக்கை செய்திக்குறிப்பில் தொழிற்சாலைகளை ஊக்குவிக்கும் வகையில் 14.1.2026 அரசாணையின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ள காற்றாலை மின்சார கொள்கைகளை தென்னிந்திய பஞ்சாலை சங்கத்தின் தலைவர் துரைபழனிச்சாமி வரவேற்றுள்ளார்.
இத்தகைய திட்டங்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர், கைத்தறி மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் சு.காந்தி தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, TANGEDCO CMD ராதாகிருஷ்ணன் மற்றும் அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் சைமா தலைவர் நன்றி தெரிவித்துள்ளார்.
வருடாந்திர காற்றாலை மின்சார வைப்புதிட்டம், மெகாவாட் ஒன்றுக்கு 5 ஆண்டுகளுக்கு ரூ.30 லட்சத்திலிருந்து ஆண்டு ஒன்றுக்கு ரூ.50,000 ஆக கட்டுமான செலவு கட்டணத்தைக் குறைந்து இருப்பது பழைய காற்றாலைகளுக்கு எளிய முறையில் காலகெடுவை நீட்டித்து இருப்பது போன்ற திட்டங்களை சைமா தலைவர் வரவேற்றுள்ளார்.
புதியகாற்றாலை மின்சார கொள்கைகள் பசுமைமின்சாரத்தை ஊக்குவித்து தமிழகதொழில் போட்டி ஸ்திரனைஅதிகரித்து மூலதனங்களை ஈர்க்கும் என்றுதிரு துரை பழனிசாமி கூறியுள்ளார். மின்சாரத்தை வாங்கும் ஒப்பந்தம் மற்றும் மின்சார வீலிங் ஒப்பந்தம் போன்றவற்றை நீட்டித்து இருப்பதை அவர் வரவேற்றுள்ளார்.
2018 க்குபிறகு நிறுவப்பட்டு வரும் காற்றாலைகளுக்கு மின்சார வைப்பு திட்டத்தை அறிவித்தால் தமிழகம் தொடர்ந்து தொழில் துறையில் சிறந்து விளங்கும் என்றும் முதல்வர் அவர்கள் இத்திட்டத்தை பரிசீலினை செய்து நல்ல முடிவு எடுப்பார் என்றும் சைமா தலைவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்த தகவலை சைமா பொதுச்செயலாளர் மு.செல்வராஜூ தெரிவித்துள்ளார்.



