கோயம்புத்தூர் மாவட்ட டென்னிஸ் சங்கம் சார்பில் கோவை மாவட்ட டென்னிஸ் சங்க லீக் 2026 போட்டிகள் இன்று முதல் தொடங்கியது. இப்போட்டிகள் வார இறுதி நாட்களில் காலை 7 மணி முதல் 11 மணி வரையும், மாலை 3 மணி முதல் 6 மணி வரையும் நடைபெறும்.
இப்போட்டிகள் கோயம்புத்தூர், திருப்பூர், பொள்ளாச்சி மற்றும் நீலகிரி என ஒவ்வொரு மாவட்டங்களிலும் வார இறுதியில் நடைபெறவுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்ட டென்னிஸ் சங்கத்தின் தலைவர் ஸ்ரீநிவாசன், செயலாளர் சதீஷ் நாயர், துணைத் தலைவர் சொக்கலிங்கம், இணை செயலாளர் டாண்டூ, துணைத் தலை வர் சதாசிவம் மற்றும் பொருளாளர் நரேந்திரன் வழிகாட்டுதலின் கீழ் செயல்பட்டு வருகிறது.
இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த சங்கத்தின் செய லாளர் சதீஷ் நாயர் மற் றும் துணைத் தலைவர் சொக்கலிங்கம், கூறியதாவது: 2026ம் ஆண்டு லீக்கில் எ முதல் கே வரை 11 பிரிவுகளில் 116 அணிகள் மற்றும் சுமார் 1,200 வீரர்கள் பங்கேற்க உள்ளனர். 2024 இல் 109 அணிகளாக இருந்த லீக், 2025 இல் 111 அணிகளாக வளர்ச்சி பெற்றுள்ளது.
2026ம் ஆண்டு நடை பெறும் கோயம்புத்தூர் மாவட்ட டென்னிஸ் சங்கத்தின் லீக், அதன் 48-வது ஆண்டாகும். மனோஜ் ராகவன், ஸ்ரீராம் பாலாஜி, நிருபமா போன்ற உலகத் தர வீரர்களை உருவாக்கிய கோயம் புத்தூர், இன்று ஜுனியர் ஐடிஎஃப் (ITF) உலக தரவரிசையில் 34-வது இடத்தில் உள்ள மாயாவையும் வழங்கியுள்ளது.
மேலும், கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பதிவு செய்யப்பட்ட டென்னிஸ் அகாடமிகளுடன் இணைந்து, அகில இந்திய டென்னிஸ் சங்கத்தின் (AITA) அங்கீகாரம் பெற்ற போட்டிகளை அனைத்து பிரிவுகளிலும் கோயம்புத்தூர் மாவட்ட டென்னிஸ் சங்கம் நடத்தி வருகிறது.
போட்டி அட்டவணை மற்றும் முடிவுகள் www.cdta.co.in என்ற இணைய தளத்தில் காணலாம். இவ்வாறு கூறினர்.



